பெண்களுக்கு எச்சரிக்கைவிடும் காவல்துறை..!
மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் கிராமப்புற பெண்களை அணுகும் மோசடி பேர்வழிகள், தொழில் தொடங்க கடன் உதவி பெற்றுத் தருகிறோம் என கூறிகின்றனர். இவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பும் பெண்களிடம், கடன் தொகை பெற முன்பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விடுகின்றனர்.
பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை. அவர்களது அலைபேசி எண்ணும் அணைக்கப்பட்டிருக்கும். மேலும் அந்த மோசடி நபர்கள் பெண்களிடமிருந்து ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களையும் பெற்றுக் கொண்டு அதன் மூலமும் மோசடி செய்யும் வாய்ப்பும் உள்ளது.
எனவே பொது மக்கள் மாவட்ட ஆட்சி தலைவரால் அங்கீகரிக்கப்பட்ட மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் மட்டுமே குழுக் கடன் மற்றும் சிறுகடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.