பிசினஸ் திருச்சி வாசகர் விமர்சனங்கள்…
பிசினஸ் திருச்சி வாசகர் விமர்சனங்கள்…
வணிகம் பழகு’ கட்டுரையின் தொடக்கமே உற்சாகத்தை தரும் விதமாக அமைந்துள்ளது. வணிகத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தி சோர்வைத்தடுக்கும் முயற்சியாகவும் உள்ளது. அடுத்தடுத்த தொடரினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ஆர்.ராஜேஷ்வர், திருவரம்பூர்
‘ஸ்க்ரீன் ஷாட் அனுப்புங்க ஏமாறுங்க..’, ‘அஞ்சலக கணக்குகளில் ஏப்ரல் 1 முதல் ஏமாற்றம்..’. ‘அதிக பி.எஃப். கட்டும் பணியாளர்களே பி அலர்ட்..’. போன்ற வியாபாரத்தில் நடக்கும் க்ரைம் மற்றும் முன்னெச்சரிக்கை செய்திகள் இடம் பெறுவது விழிப்புணர்வாக அமைகிறது.
மு.ரகுராமன், ஸ்ரீரங்கம்
‘அம்பானி ஆவது என் இரும்பு கனவு’, ‘சாம்பார் வைக்கும் நேரத்தில் அறுவை சிகிச்சை, என வெவ்வேறான விதமான கட்டுரைகளை சிறப்பாக வெளியிட்டு இருப்பது மாவட்ட அளவிலான பத்திரிக்கையை உலகத் தரத்திற்கு அழைத்துச்செல்வதாக உள்ளது.
எம்.ரவிச்சந்திரன், உறையூர்
மாவட்டத்தில் இயங்கும் பத்திரிக்கை என்றாலும் ‘பிசினஸ் திருச்சி‘ தன்னுடைய தரத்திலும், செய்தியிலும் சிறிதும் சமரசமின்றி வெளியிடுவது நல்ல முயற்சி, அதிலும் அரசியலில் ஈடுபடுபவர்களை பற்றி செய்தி வெளியிடும் போது அவர்களின் வணிகம் சம்பந்தமான பக்கத்தை மட்டும் செய்தியாக வெளியிடுவது, பிசினஸ் திருச்சியின் மாபெரும் யுக்தி. வாழ்த்துக்கள்.
கி.சீனிவாசன், பீமநகர்