முதலீடின்றி லாபம் தரும் பிசினஸ்கள்
வேலைக்கு செல்வது என்பது சிலருக்கு ஒவ்வாமையான விஷயமாகும். ஆனால் என்ன செய்வது, “தனியாக தொழில் தொடங்க வேண்டுமென்றால் என்னிடம் முதலீடு இல்லையே” என கவலைப்படும் நபரா நீங்கள். உங்களுக்கான சில முதலீடு இல்லா தொழில் திட்டங்களை இங்கே உங்களுக்கு நாங்கள் தருகிறோம்.
வெட்டிங் ப்ளானர் தொழில் : திருமண விசேஷங்களுக்கு மண்டபம், டெக்கரேஷன், சமையல், புகைப்படக்காரர்கள், மேளவாத்தியம், வாகன வசதி என அனைத்தையும் தேடித் தேடி அலைந்து பிடிக்கும் நிலையில் பலர் இல்லை. வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் இங்கே திருமணம் செய்ய வேண்டுமென்றால் ஒவ்வொரு இடத்தையும் தேடி அலைய முடியாது. அத்தகையவர்கள் தான் உங்கள் இலக்கு. மேற்கூறிய அனைத்தையும் அவர்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ப செய்து கொடுத்தால் அதற்கான சேவை கட்டணமாக ஒரு தொகை உங்களுக்கு கிடைக்கும்.
விளம்பர ஏஜென்ட் : நாளிதழ்கள் மற்றும் உள்ளுர் தனியார் தொலைகாட்சி நிறுவனங்களுக்கு விளம்பரம் சேகரித்து கொடுத்து அதன் மூலம் பெறும் கமிஷன் உங்களுக்கு கணிசமான வருமானத்தை கொடுக்கும்.
பழைய வாகனங்களை விற்பது : பழைய இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை விற்போர், பெறுவோருக்கு இடையில் தரகராக செயல்பட்டு கணிசமான வருமானம் பெறலாம்.
ஈவண்ட் மேனேஜ்மெண்ட் : பிறந்த நாள் கொண்டாட்டங்கள், அலுவலக நிகழ்ச்சிகள், சுற்றுலா பயணங்கள் போன்றவற்றைத் திட்டமிடுவதும் அவற்றைச் செயல்படுத்துவதும் ஒரு சிறந்த தொழில். இதற்கு பெரிய மூலதனம் எதுவும் தேவையில்லை. கொண்டாட்டங்கள், நிகழ்ச்சிகளுக்கு தேவையான சேவைகளை உள்ளூரிலேயே பெற்றுத் தரலாம். ஆனால் சுற்றுலா பயணத்தை ஏற்பாடு செய்வது சுற்றுலா தளங்கள் பற்றிய விபரங்களை அறிந்திருக்க வேண்டும். இத்துறையில் நல்ல வருமானம் பார்க்கலாம். உங்களின் பழக்கங்களை அதிகரித்துக் கொண்டால் இந்த பிசினஸில் நீங்கள் பல லட்சங்களை சம்பாதிக்கவும் வாய்ப்புண்டு.