பெட்ரோல் டீசல் வாகன பயன்பாட்டை குறைக்கும் வகையில் வாகன உற்பத்தியாளர்களுக்கு பலவிதமாக உதவுவதோடு சார்ஜர் பங்க் அமைப்பதற்கும் மானியத்துடன் கூடிய கடனுதவியை வழங்கி வருகிறது மத்திய அரசு. அத்துடன் மின்வாகனங்கள் வாங்குவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியமும் அறிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை அடுத்து மின் வாகனங்களின் பக்கம் பொது மக்கள் பார்வை திரும்பியுள்ளது. மின்வாகனங்கள் வாங்குவதற்கு பொது மக்கள் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து இஒய் மொபிலிடி கன்ஸ்யூமர் இண்டெக்ஸ் என்ற நிறுவனம் 13 நாடுகளைச் சேர்ந்த ஒன்பதாயிரம் வாடிக்கையாளர்களிடம் ஆய்வு நடத்தியது.
ஆய்வில் பங்கு கொண்ட இந்தியர்களில் 10 ல் 3 பேர் மின்சார வாகனம் அல்லது ஹைட்ரஜனால் இயங்கும் வாகனம் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். ஆய்வில் பங்கேற்றோர்களில் 90 சதவீதத்தினர் பேட்டரி வாகனங்களுக்கான முன்பதிவு பிரீமியத் தொகையை செலுத்துவதாக கூறியுள்ளனர். மேலும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 முதல் 200 கி.மீ. வரை ஓடும் பேட்டரி வாகனங்கள் வாங்குவதில் ஆர்வமாக உள்ளனர். ஆய்வில் அதிகமானோர், பேட்டரி வாகனங்கள் அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் சார்ஜிங் செய்யும் வகையில் இருக்க வேண்டும் என தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.