பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பேங்க் ஆஃப் பரோடா (பிஓபி) ஆக்ஸிஸ் உள்ளிட்ட முக்கிய வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதங்களை 0.10 % வரை உயா்த்தியுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு ‘எம்சிஎல்ஆா்’ –ஐ (எம்சிஎல்ஆா் என்பது வங்கிகள் கடனுக்கு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச வட்டி விகிதமாகும்) 0.10 % உயா்த்தியுள்ளது.
இதனால், ஓராண்டு காலத்துக்கான கடன் வட்டி விகிதம் 7 % லிருந்து 7.10 % உயா்த்தப்பட்டுள்ளது. இது, ஏப்ரல் 15-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
இதேபோல் பிஓபி, ஆக்ஸிஸ், கோட்டக் மஹிந்திரா வங்கிகளும் எம்சிஎல்ஆா் விகிதத்தை தலா 0.05 % உயா்த்தியுள்ளன.
இதனால் கார், தனிநபா், வீட்டு வசதி கடன் வாங்கியோர் செலுத்தும் மாதாந்திர தவணைத்தொகை உயர வாய்ப்பு உள்ளது.