இளம் வயதினர் வேலையில் சேர்ந்ததுமே, ‘கிரெடிட் கார்டு’ பெறுவதற்கான வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது.
கிரெடிட் கார்டு மூலம் எளிதாக பணம் செலுத்தலாம் மற்றும் ‘கேஷ் பேக்’ உள்ளிட்ட சலுகைகளும் அவர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.
என்றாலும் கிரெடிட் கார்டு பயன்பாடு கட்டுப்பாட்டில் இருந்தால் மட்டுமே அதன் மூலம் பயனடையலாம். இல்லையெனில் கடன் வலையில் சிக்கிக்கொள்ள வேண்டியதுதான்.
உங்களுக்கான சில டிப்ஸ்:
செலவு கட்டுப்பாடு:
விரும்பும் பொருட்களை எல்லாம் வாங்கும் முன் சிறிது யோசித்து இதனால் செலவுகூடும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். கட்டுப்பாடில்லாமல் செலவு செய்வது பாதிப்பை உண்டாக்கும். செலவு பழக்கத்தை கட்டுப்படுத்த முடிந்தால் மட்டுமே கார்டு பெற வேண்டும்.
குறைந்த தொகை:
மாதாந்திர வருவாயில் குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்தும் வசதி எனில் அதிக தொகையை வட்டியாக செலுத்த வேண்டியிருக்கும். எனவே, உரிய காலத்தில் பணத்தை செலுத்துவதில் உறுதி கொள்ள வேண்டும்.
கடன் சுழற்சி:
கிரெடிட் கார்டு கடனை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பதால் கடனுக்கு வட்டியும், அபராதமும் கூடுதலாய் இருக்கும். இது நம்மை கடனில் சிக்க வைத்துவிடும். பழைய கடனை அடைக்காமல், புதிதாக கடன் வாங்கக்கூடாது.
கடன் அளவு:
கிரெடிட் கார்டை எந்த அளவு பயன்படுத்துகிறோம் என்பதை வைத்து கிரெடிட் ஸ்கோர் கணிக்கப்படும். அதனால் கடன் அளவை பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டுடன் இருப்பதே கிரெடிட் ஸ்கோர் வலுவாக உதவும்.
கவனம் தேவை:
கிரெடிட் கார்டு பெறுவதற்கு முன், கார்டு பயன்பாடு தொடர்பான இடர்களை அறிந்து, தெளிவும், உறுதியும், பொறுப்புடனும் பயன்படுத்துங்கள்.