திவால் நிலைக்கு ஆளான ருச்சி சோயா நிறுவனத்தை, கடந்த 2019ல், பாபா ராம்தேவ் தலைமையிலான ‘பதஞ்சலி ஆயுர்வேத்’ நிறுவனம் 4,350 கோடி ரூபாயில் கையகப்படுத்தியது.
ருச்சி சோயா 4,300 கோடி ரூபாய் நிதியை திரட்டும் வகையில், தொடர் பங்கு வெளியீட்டுக்கு வந்தது
இதையடுத்து, ருச்சி சோயாவை, பதஞ்சலி நிறுவனத்தின் உணவு வணிக பிரிவுடன் இணைக்க வேண்டும் என்றும், நிறுவனத்தின் பெயரை, பதஞ்சலி புட்ஸ் நிறுவனம் என மாற்ற வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக ருச்சி சோயா நிறுவனத்தின் இயக்குனர் குழு முடிவு செய்துள்ளது.
பதஞ்சலி நிறுவனம், அதன் அனைத்து உணவு வணிகத்தையும் ருச்சி சோயாவுக்கு மாற்றும் என்றும், பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம், உணவு அல்லாத, பாரம்பரிய மருத்துவமுறைக்கான நிறுவனமாக திகழும் என்றும், பாபா ராம்தேவ் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.