அஞ்சலக கணக்குகளில் ஏப்ரல் 1 முதல் மாற்றம்..!
வருகிற ஏப்ரல் 1 முதல், அஞ்சலக கணக்குகளில் சில மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய அஞ்சலகங்களில் உள்ள அடிப்படை சேமிப்பு கணக்கில் மாதத்திற்கு நான்கு முறை மட்டும் இனி இலவசமாக பணம் எடுக்க முடியும். அதன் பிறகு எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் விதிக்கப்பட உள்ளது. இந்த கட்டணமானது ரூ.25 அல்லது எவ்வளவு பணம் எடுக்கிறோமா அதில் 0.5% இருக்கலாம். அதே நேரம் பல முறையான டெபாசிட்டுகளுக்கு எந்த கட்டணமும் இல்லை.
சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு கணக்கு மாதத்திற்கு ரூ.25,000 வரையில் பணம் எடுக்க எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. அதன் பிறகு எடுக்கப்படும் பணத்திற்கு கட்டணம் விதிக்கப்படும். இது ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் ரூ.25 அல்லது எவ்வளவு பணம் எடுக்கிறோமோ அதில் 0.5% இருக்கலாம். இந்த கணக்குகளில் டெபாசிட்டுகள் ரூ.10,000 வரையில், எந்த கட்டணமும் இல்லை. அதன் பிறகு செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படலாம். அல்லது டெபாசிட் தொகையில் 0.50% கட்டணமாக வசூலிக்கப்படலாம்.
அதே போல் AePS (Aadhar Enabled Payment Scheme) கணக்கில் இது வரையில் இலவச சேவைகளாக இருந்த நிலையில், தற்போது இதற்கும் கட்டணம் விதிக்கப்படவுள்ளது. IPPB (INDIA POST PAYMENT BANK) நெட்வொர்க்குகளுக்கு இலவசமாக பரிவர்த்தனை செய்யலாம் என்றாலும், IPPB அல்லாத பரிவர்த்தனைகளில் மூன்று பரிவர்த்தனைகளுக்கு மட்டும் இலவசம். இதன் பிறகு கட்டணம் விதிக்கப்படும்.