Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

கடன் பிரச்சனை தீர… அதிக வட்டியில் கிரெடிட் கார்டு கடன்…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

கடன் பிரச்சனை தீர… அதிக வட்டியில் கிரெடிட் கார்டு கடன்…

மொத்த கிரெடிட் கார்டு கடன் என்பது என்ன? முதலில், கிரெடிட் கார்டுகளில் ஒவ்வொரு கார்டுக்கும் ஆண்டு வட்டி விகிதம் எவ்வளவு, ஒவ்வொரு கார்டிலும் தனித்தனியே மொத்த நிலுவைத் தொகை என்ன என்பதை அவர்கள் கண்டறிய வேண்டும்.

எந்த கிரெடிட் கார்டு கடனை முதலில் அடைக்க வேண்டும்? கடனை அடைக்க இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழியில், அனைத்துக் கடன் களிலும் குறைந்தபட்ச தொகையைச் செலுத்த வேண்டும். அதே நேரம், அதிக வட்டியிலான கடனில் இன்னும் கொஞ்சம் கூடுதல் தொகையைக் கட்டி வர வேண்டும். இரண்டாவது வழியில், அனைத்துக் கடன்களிலும் குறைந்தபட்சத் தொகையை செலுத்த வேண்டும். குறைவாகப் பாக்கி உள்ள கடனில் இன்னும் கொஞ்சம் கூடுதல் தொகையைக் கட்ட வேண்டும்.

பிசினஸ் டிவி செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள

முதல் முறை யில், கிரெடிட் கார்டு கடனை அடைக்கும் போது வட்டிக்குச் செல்லும் தொகை குறையும். இரண்டாவது முறையில், கடன் களின் எண்ணிக்கை விரைந்து குறையும். இதனால் மனரீதியாக ஒரு திருப்தி, சந்தோஷம் ஏற்பட்டு, மற்ற கடன்களையும் விரைந்து அடைக்கும் சூழ்நிலை உருவாகும். இந்த இரு வழிமுறைகளில் ஒருவருக்கு எது வசதியான முறையாக இருக்கிறதோ, அதைப் பின்பற்றி கிரெடிட் கார்டு கடன்களிலிருந்து விடுதலை பெறலாம்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

வட்டி விகிதத்தைக் குறைக்க பேச்சுவார்த்தை : கிரெடிட் கார்டு நிறுவனங் களுடன் வட்டியைக் குறைக்க பேச்சுவார்த்தை நடத்தலாம். நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்கும்பட்சத்தில் ஓரிரு கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வட்டி விகிதத்தைக் குறைக்க ஒப்புக்கொள்ளும் வாய்ப்புள்ளது. இதன்மூலம் உங்கள் வட்டி சுமையைக் குறைத்து, கடனை விரைந்து அடைக்க முடியும்.
கிரெடிட் கார்டு கடனை அடைக்க என்ன செய்யலாம்? :
கிரெடிட் கார்டு கடன்களை விரைந்து முடிக்க பணம் திரட்டும் மாற்று வழிகளைக் கண்டறியுங்கள். உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரி பவர்கள், வணிகக் கூட்டாளிகள் போன்றவர்களிடம் வட்டி இல்லாமல் அல்லது குறைந்த வட்டியில் கடன் வாங்க முடியுமா என்று பாருங்கள்.
பெரும்பாலான வங்கிகள் தனிநபர் கடன்களை 13%-&14% வட்டி விகிதத்தில் வழங்குகின்றன. உங்கள் சம்பளம் எந்த வங்கிக் கணக்கில் போடப்படுகிறதோ, அந்த வங்கியில் தனிநபர் கடன் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. பி.பி.எஃப், ஆயுள் காப்பீடு பாலிசி, தங்க நகை அடமானக் கடன் மூலமும் கிரெடிட் கார்டு கடன்களை அடைக்கலாம். இவற்றின் மூலம் வாங்கும் கடனுக்கான வட்டி 8-&11%க்குள் தான் இருக்கும்.

அடுத்து ஆர்.டி, எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவந்தால், கிரெடிட் கார்டு கடனை முடிக்கும் வரை அவற்றை நிறுத்தி வைக்கலாம். கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை முழுவதுமாகக் கட்டி முடிக்கும் வரை அநாவசிய செலவுகளை தவிர்ப்பது அவசியம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.