பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை சமாளிக்க கிரெடிட் கார்டு..! எது பெஸ்ட்…
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க ஒரே தீர்வு சைக்கிளில் செல்வது தான்! அது தெரியாதா எங்களுக்கு! பைக் இல்லைனா பிழைப்பே இல்லை என்ற நிலையில் வாழ்கிறோம் என்று சொல்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வாய்ப்பு வங்கி வழங்கும் பெட்ரோ கிரெடிட் கார்டு மட்டுமே..!
ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ போன்ற வங்கிகள் எரி பொருளுக்கென பிரத்யேக கிரெடிட் கார்டை வழங்குகின்றன. இந்த கிரெடிட் கார்டுகளை பெட்ரோல் அல்லது டீசலுக்காக பயன்படுத்தும் போது, குறிப்பிட்ட சலுகையை ரிவார்ட் பாயிண்டுகளாக இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த ரிவார்ட் பாயிண்டுகளை அதிகமாக பெற்று பின்னர் அதன் மூலம் எரிபொருளாகவோ அல்லது கேஷ் பேக்காகவோ பெற்றுக் கொள்ள முடியும்.
HDFC வங்கி கிரெடிட் கார்டினை இந்தியன் ஆயில் பங்குகளில் பயன்படுத்தும் போது 5% சலுகை அளிக்கப்படுகிறது.
SBI Card Octane கிரெடிட் கார்டு மூலம் ஙிறிசிலி பம்புகளில் பெட்ரோல், டீசல் போடும் போது ஒவ்வொரு ரூ.100 பரிமாற்றத்திற்கும் 25 ரிவார்ட் பாயிண்டுகள் அளிக்கப் படுகின்றன.
CITI வங்கி கிரெடிட் கார்டினை இந்தியன் ஆயில் பங்குகளில் பயன்படுத்தும் போது ஒவ்வொரு ரூ.150 பரிமாற்றத்திற்கும் 4 ரிவார்ட் பாயிண்டுகள் அளிக்கப் படுகின்றன. ரிவார்ட் பாயிண்டு களை பயன்படுத்தி ஷாப்பிங் செய்து கொள்ளவும் வழிவகை உள்ளது.
நீங்கள் பெறும் பெட்ரோ கிரெடிட் கார்டுகளுக்கு ஆண்டு சந்தாவும் வசூலிக்கப்படலாம்.
எந்த நிறுவனத்தின் கார்டுகளை நீங்கள் பெறுகிறீர்களோ அந்த நிறுவனம் கூறும் விதிமுறைகளை முழுமையாக படித்து தெரிந்து கொண்ட பின்னர் கிரெடிட் கார்டை வாங்குவது சரியாக இருக்கும்.