ECLGS திட்டத்தில் கடன்… செப். 30 வரை டைம் இருக்கு…
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவிட மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
ஏற்கனவே இ.சி.எல்.ஜி.எஸ். திட்டத்தில் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.2.54 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.2.40 கோடி மதிப்பிலான கடன் ஏற்கனவே பயனாளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர்கள் மேலும் பயன் பெறும் வகையில் இந்த திட்டத்தின் காலம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் வங்கிகள் மேலும் ரூ.45,000 கோடி மதிப்பிலான கடன் வழங்க வழி ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுனில் மேத்தா தெரிவித்துள்ளார்.