திருச்சியில் கிரிப்டோ கரன்சி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்!
திருச்சியில் கிரிப்டோ கரன்சி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்!
திருச்சி தில்லைநகரில் கிரிப்டோ கரன்சி குறித்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றது. விநியோகஸ்தர் ரஞ்சித் குமார் வரவேற்று பேசினார் .
நிர்வாக ஒருங்கிணைப்பாளர் செழியன் கிரிப்டோ கரன்சி தோற்றம் ,வளர்ச்சி, முதலீட்டினால் கிடைக்கும் லாபம் கடந்த சில ஆண்டுகளில் கிரிப்டோவில் வளர்ச்சி ஆகியவை குறித்து முதலீட்டாளர்களிடம் விளக்கிப் பேசினார்.
கைரா கிரிப்டோ எக்சேஞ்ச் முதன்மை செயல் அலுவலர் அகிலன் பங்கேற்று கிரிப்டோ கரன்சி என்பது ஒரு மெய்நிகர் நாணயம். அது பிளாக் செயின் என்ற தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு தகவல்களை ஹேக் செய்ய முடியாத படி பாதுகாக்கப்படுகிறது.
மேலும் சில ஆண்டுகளில் தவிர்க்க முடியாத சக்தியாக கிரிப்டோ உருவெடுக்கும் என்று பேசினார். கூட்டத்தில் திருச்சி, கள்ளக்குறிச்சி, சென்னை, பாண்டிச்சேரி, புதுக்கோட்டை ,அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவில் விநியோகஸ்தர் கோபாலன் நன்றி கூறினார்.
முன்னதாக திருச்சி தில்லைநகர் இந்திய மருத்துவர் சங்க கட்டிடத்தின் பின்புறம் ஜோதி காம்ப்ளக்ஸ் மூன்றாவது தளத்தில் கைரா கிரிப்டோ எக்சேஞ்ச் கிளை அலுவலகம் திறக்கப்பட்டது.