கிரிப்டோ கரன்சி பிசினஸ் சூதாட்டம்தான்… ரிசர்வ் வங்கி கவர்னர் அதிரடி..!
கிரிப்டோ கரன்சி பிசினஸ் சூதாட்டம்தான்… ரிசர்வ் வங்கி கவர்னர் அதிரடி..!
நம்நாட்டில் சூதாட்டத் தை அனுமதிப்பதில்லை. ஒருவேளை சூதாட்டத்தை அனுமதிக்க விரும்பினால், கிரிப்டோ கரன்சியை சூதாட்டமாக கருதி இதனால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
எப்படியானாலும் கிரிப்டோ கரன்சியை ஒரு நிதி தயாரிப்பு அல்லது நிதி சொத்தாக கருதி பேசுவது முற்றிலும் தவறான வாதம் ஆகும். நாட்டில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை அனுமதிப்பது ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைக்கும்.
நாட்டின் பொருளாதாரத்தில் பராமரிக்க வேண்டிய பணவியல் கொள்கை, பணப்புழக்கம் மற்றும் பண விநியோக நிலை ஆகியவற்றை தீர்மானிக்கும் திறனையும் ரிசர்வ் வங்கி இழக்கும் என்று அச்சம் தெரிவித்தார்.
Crypto Assets பரிமாற்ற வழிமுறையாக மாறும் பண்புகளை கொண்டுள்ளன, இதில் பெரும்பாலானவை டாலர் மதிப்புடையவை. ரிசர்வ் வங்கியால் வழங்கப்படாத கிரிப்டோவை கொண்டு உதாரணத்திற்கு தோராயமாக 20% பரிவர்த்தனைகள் நடந்தால், பொருளாதாரத்தில் 20% பரிவர்த்தனைகள் மீதான கட்டுப்பாட்டை RBI இழக்கும்.
இது இந்திய பொருளாதாரத்தில் டாலர் மயமாக்கலுக்கு வழிவகுக்கும் என்றார்.