செயின்ட் ஜோசப் கல்லூரியின் 178 வருட வரலாற்றில் முதன் முறையாக மேம்பாட்டு மையம் தொடக்கம் !
செயின்ட் ஜோசப் கல்லூரியின் 178 வருட வரலாற்றில் முதன் முறையாக மேம்பாட்டு மையம் தொடக்கம் !
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் குவான்ட்லர் டெக்னாலஜி நிறுவனத்தின் மென்பொருள் கட்டமான பரிவின் திறப்பு விழா 30 செப்டம்பர் 2022 அன்று நடைபெற்றது. இந்த மேம்பாட்டு மையத்தை கல்லூரி அதிபர் முனைவர் லியோனார்டு பெர்ணாண்டொ ஆசீர்வதித்தார், கல்லூரி செயலர் முனைவர் கே.அமல் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் எம்.ஆரோக்கியசாமி சேவியர் வாழ்த்துரை வழங்கினார்.
செயின்ட் ஜோசப் கல்லூரியின் 178 வருட வரலாற்றில் முதன் முறையாக இந்த மேம்பாட்டு மையம் அமைந்துள்ளது. செயின்ட் ஜோசப் கல்லூரி மற்றும் குவாண்ட்லர் டெக்னாலஜிஸ் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மேம்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த மேம்பாட்டு மையத்தில் தொழில்நுட்ப பயிற்சிகள், வழிகாட்டுதல், தொழில்நுட்ப நோக்குநிலை, பாடத்திட்ட வடிவமைப்பு, சிறப்பு கருத்தரங்குகள் நடத்தப்படும். குவாண்ட்லர் டெக்னாலஜிஸ் மூலம் வேலை வாய்ப்பு அடிப்படையில் கணினி அறிவியல் மற்றும் அதனுடன் இணைந்த அறிவியல் மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும். இந்த மேம்பாட்டு மையம் தொழில் மற்றும் நிறுவன தொடர்புகளின் இடைவெளியைக் குறைக்கும்.
கல்லூரி வளாகத்தினுள் தங்களின் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்காக இந்த மையத்தைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய கிராமப்புற மாணவர்களுக்கு இந்த மேம்பாட்டு மையம் பெரும் வரப்பிரசாதமாக அமையும். இறுதியாக, குவாண்ட்லர் டெக்னாலஜிஸ் நிர்வாக இயக்குநர் பெரியசாமி பொன்னுசாமி நன்றியுரை வழங்கினார்.
தொடக்க விழாவில் எம்சிஏ, எம்எஸ்சி டேட்டா சயின்ஸ் மற்றும் எம்எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் சுமார் 200 மாணவர்கள் துணை முதல்வர்கள், புலத்தலைவர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.