Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று!  திருச்சி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

 வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று!  திருச்சி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு!

திருச்சிராப்பள்ளி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநில அரசு ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியதாரர்கள்,  ஜூலை 1 முதல் 30 செப்டம்பர் 2022 வரை, அவர்களது வீட்டு வாசலிலேயே, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை, தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), தமிழக அரசுக்கும், இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே, கடந்த 31.05.2022 அன்று கையெழுத்தாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, வருடாந்திர உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிப்பதில் இருந்து மாநில அரசு விலக்கு அளித்து இருந்தது. இந்த ஆண்டு சுமார் 7,15,761 மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர்/ குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், வரும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

இந்நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக, ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் “இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி”, ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், PPO எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும் என திருச்சிராப்பள்ளி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எனவே மாநில அரசு ஓய்வூதியம்/ குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.