அதிகரிக்கும் டிஜிட்டல் திருட்டு… பணத்தைப் பாதுகாக்கும் வழிமுறை
“கூட்டம் எங்கு அதிகமாக இருக்கிறதோ, அங்குதான் பிட்பாக்கெட் அடிப்பவர்களும் அதிகமாக இருப்பார்கள். அப்படித்தான் இதுவும். இன்றைய நிலையில் பேமென்ட் அப்ளிகேஷன்களை எல்லா வற்றுக்கும் பயன்படுத்துவது அதிகமாகிவிட்டது. ஒரு டீ செலவுக்கான பணத்தைக்கூட, க்யூ.ஆர் கோடைப் பயன்படுத்தித் தான் மக்கள் செலுத்துகிறார்கள். இப்படி பேமென்ட் ஆப்ளி கேஷன் பயன்பாடு அதிகரித்து உள்ளதால், அங்கு ஹேக்கர்களின் ஆதிக்கமும் அதிகரித்துள்ளது.
முதலில் மக்கள் பேமென்ட் ஆப்ளிகேஷன் பயன்படுத்தும் விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு பேமென்ட் ஆப்ளிகேஷனில் அனைத்து வங்கிக் கணக்கையும் இணைக்காதீர்கள். பணப்பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தும் ஒரே ஒரு வங்கிக் கணக்கை மட்டுமே பேமென்ட் ஆப்ளிகேஷனுடன் இணைத்து வையுங்கள். அதிலும் அதிகமான தொகையைப் போட்டு வைக்க வேண்டாம். சில ஆயிரங்கள் மட்டும் இருப்பதுபோல பார்த்துக்கொள்ளவும். அதே போல, என்னென்ன பேமென்ட் ஆப்ளிகேஷன்கள் இருக்கிறதோ, அவை அனைத்தையும் டவுன்லோடு செய்து பயன்படுத்தா தீர்கள். ஒரே ஒரு ஆப்ளிகேஷனை மட்டும் பயன் படுத்துவது நல்லது. அதுவும் இதர நிறுவனங்களில் ஆப்ளிகேஷனாக இல்லாமல், உங்களுடைய வங்கி ஆப்ளிகேஷனாக இருந்தால் இன்னும் பாதுகாப்பானது. அதில் ஏதாவது சிக்கல் என்றாலும், நேரடியாக வங்கி யைத் தொடர்புகொள்ள முடியும்.
முன்பெல்லாம் நெட்பேங்கிங் வசதியை மக்கள் அதிகமாகப் பயன்படுத்தி வந்தபோது, மெயில் வழியாக லிங்குகளை அனுப்பி ஹேக்கர்கள் தங்களில் திருட்டு வேலைகளைச் செய்து வந்தார்கள். அது போலத்தான் இன்று பேமென்ட் ஆப்ளிகேஷன் வழியாக ஸ்கிரேட்ச் கார்டு லிங்குகளை அனுப்புகிறார்கள். முதலில் அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை நம்பி லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம். சில நேரங்களில் எஸ்.எம்.எஸ்-களிலும் பரிசு வென்றிருப்பதாகச் சொல்லி லிங்குகள் வருகின்றன. அதை க்ளிக் செய்யாமல், அந்த மாதிரியான செய்திகளை உடனுக்குடன் போனில் இருந்து டெலிட் செய்துவிடுங்கள்.
வங்கி சார்ந்த விவரங்களை இணையப் பயன்பாடு அதிகம் கொண்டுள்ள டிவைஸ்களில் சேமித்து வைக்காதீர்கள். ஸ்மார்ட்போன்தான் எல்லாம் என்றாகி விட்ட நிலையில், அதற்குள் அனைத்து விஷயங் களையும், குறிப்பாக, உங்கள் நிதி சார்ந்த விஷயங்களைச் சேமித்து வைக்காதீர்கள்.
க்யூ.ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்வது எளிமை என்பதைத் தாண்டி, அது ஒரு கௌரவம், ஸ்டைலான ஒரு விஷயமாக மாறி விட்டது. எதற்கெடுத்தாலும் க்யூ.ஆர் கோடு செய்வதை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் வைஃபை பயன்படுத்துவதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறதோ, அதே போலத்தான், பொது இடங்களில் க்யூ.ஆர்.கோடு ஸ்கேன் செய்வதும். காலம் மாற மாற டிஜிட்டல் ஹேக்கர்களும் அதற்கு ஏற்றாற்போல தங்களில் திருட்டு வேலைக்கான உத்திகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அதனால், டிஜிட்டல் சார்ந்த பணப் பரிமாற்ற விஷயங்களில் மக்கள் மிக மிக உஷாராக இருக்க வேண்டியது அவசியம்” என்றார் தெளிவாக. இனி கிஃப்ட் கார்டுகள் உங்களுடைய போனுக்கு மெசேஜாக வந்தால் அதை உடனே டெலிட் செய்துவிடுங்கள். அதே போல, வெளியிடங்களில் க்யூ.ஆர் கோடு பயன்படுத்துவதிலும் உஷாராகச் செயல்படுங்கள்! யாரோ பணம் அனுப்புகிறார் என்று நினைத்து, உங்கள் பணத்தை இழக்காதீர்கள்!