ஆதார் கார்டில் எத்தனை வகை இருக்கு தெரியுமா?
இன்றைய காலக்கட்டத்தில் ஆதார் கார்டு என்பது முக்கியமான அடையாளச் சான்றுகளில் ஒன்றாகும். ஒவ்வொருவரின் தனித்துவத்தை அறியும் வகையில் பயோமெட்ரிக் முறையில் தனிநபர் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு இந்திய தனித்துவ ஆணையம் ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது.
வங்கி பணபரிவர்த்தனை முதல் ரயில் பணம் வரை அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு அவசியமாக உள்ளது. ஆகையால் மக்கள் எளிதாகவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்தும் வகையில் இந்திய தனித்துவ ஆணையம் 4 வகையான ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது.
அசல் ஆதார் கார்டு:
அசல் ஆதார் கார்டில் தனிநபரின் விபரங்கள், பயோமெட்ரிக் முறையில் சேமிக்கப்பட்டு யுஐடிஏஐ மூலம் எவ்வித கட்டணமும் இல்லாமல் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறது.
எம்-ஆதார்:
எம்-ஆதார் என்பது ஒரு மொபைல் ஆப். இதை கூகுள் பிளே ஸ்டோர் தளத்திலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த ஆப் ஆதார் அமைப்பு (UIDAI) சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த செயலியில் ஆதார் விவரங்களை பதிவு செய்து டிஜிட்டல் ஆதார் கார்டை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த டிஜிட்டல் ஆதார் கார்டு மூலம் அடையாள சரிபார்ப்பு இடங்களில் எளிமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இ-ஆதார்:
இ-ஆதார் என்பது மின்னணு வடிவமாகும். இதில் உள்ள QR கோட்டை SCAN செய்து தகவல்களை குறிப்பிடலாம். மேலும், இ-ஆதார்க்கு கடவுச் சொல் மூலம் பாதுகாக்கப்படுகிறது. இதன் மூலம் ஆதார் தகவல்கள் திருடப்படாமல் இருக்கும். மேலும், UIDAI கடைசி நான்கு எண்கள் மட்டும் உள்ள (Masked E-Aadhaar) மற்ற எண்கள் மறைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வழங்குகிறது.
பிவிசி ஆதார்:
பிவிசி ஆதார் கார்டின் சிறப்பம்சம் என்வென்றால், இது கிழியாது தண்ணீராலும் எவ்வித சேதமும் அடையாது. இந்த பிவிசி ஆதார் கார்டை பெற யுஐடிஏஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.50 பணம் செலுத்தி ஆர்டர் செய்து பெற்று கொள்ள வேண்டும்.