‘குறட்டை’ அலட்சியம் வேண்டாம் உயிரிழக்கும் அபாயம் ஏற்படலாம்!இஎன்டி மருத்துவ நிபுணர் -எச்சரிக்கை
திருச்சி கண்டோன்மென்ட் சாலையில் உள்ள ஜானகி ENT கிளினிக்கில் காது, மூக்கு, தொண்டை, கழுத்து சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கான சிறந்த சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அதிநவீன வசதிகளுடன் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குறித்து 33 ஆண்டு கால சிறப்பு அனுபவம் பெற்ற டாக்டர்.நி.காந்தி கூறியதாவது:
காது, மூக்கு, தொண்டை பிரச்சனை களான காது கேளாமை, காதில் வலி, ரத்தம், சீழ் வடிதல், மூக்கடைப்பு, தும்மல், மூக்கில் தண்ணீர் வடிதல், மூக்கில் சதை வளர்வது, தொண்டை வலி, எரிச்சல், இருமல், கரகரப்பு மற்றும் குரல் சம்பந்தமான பிரச்சினைகள், மூச்சடைப்பு, மூச்சு திணறல், முகவாதம், தைராய்டு, குறட்டை ஆகிய பிரச்சினைகளுக்கு அகநோக்கி மூலம் மூக்கு மற்றும் தொண்டை குறிப்பாக குரல்வளை நாண், காதுநுண்ணோக்கி மூலம் நவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. குறட்டை சம்பந்தமான விழிப்புணர்வு பொதுமக்களிடம் பெரிதும் இல்லை. முறையான சிகிச்சை இல்லாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.
தற்போது மாறிவரும் உணவு பழக்க வழக்கம் காரணமாக சிறு வயதினர் முதலே உடல் பருமன், குறட்டை ஏற்படுகிறது. குறட்டையால் தூக்க மின்மை, மன அழுத்தம், சோர்வு, கோபம், திடீர் உயிரிழப்பு ஏற்படுகிறது. குறட்டைக்கு முறையான சிகிச்சை பெற்றால் குணப்படுத்த வாய்ப்பு உள்ளது. மருந்துகள் மூலம் சரியாகாத நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் குணமடையலாம்.
அனைத்து அறுவை சிகிச்சைகளும் தற்போதைய நவீன கருவிகளான லேசர், ஹோப்லேஷன், RF மூலம் செய்யப்படுவதால் நோயாளிகளுக்கு வலி குறைவாகவும் விரைவில் தீர்வும் காணப்படுகிறது. இங்கு சிகிச்சை மட்டுமின்றி பேச்சுத் திறன், காது கேட்கும் திறனை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காது, மூக்கு, தொண்டை பராமரிப்புகளுக்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்கள் தேவைப்படுவோர் 94864 46695 என்ற எண்ணில் அழைக்கவும் என்றார்.