‘வங்கினு சொல்லாத…’ எச்சரித்த ரிசர்வ் வங்கி
கூட்டுறவு சங்கங்கள் bank, banker, banking போன்ற பெயர்களைப் பயன்படுத்தக் கூடாது என்று ரிசர்வ் வங்கி திட்டவட்டமாகத் அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடிக் காரணம் இது தான்..
கூட்டுறவு சங்கங்கள் கட்டுப்பாட்டைமீறி வாடிக்கையாளர்களின் பணத்தை வாங்குவதாகவும், கடன் வழங்குவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, இதுபோன்ற கூட்டுறவு சங்கங்களில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் பணத்துக்கு காப்பீடு கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட வங்கி ஒழுங்குமுறை விதிமுறைச் சட்டம் 1949-ன்படி, 2020 செப்டம்பர் 29ஆம் தேதி முதல் கூட்டுறவு சங்கங்கள் எதுவும் bank என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கி சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாத கூட்டுறவு சங்கங்களுக்கு எந்த அங்கீகாரத்தையும் ரிசர்வ் வங்கி வழங்கவில்லை என்பதே கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது.
ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாத எந்தவொரு கூட்டுறவு சங்கங்களிலும் செய்யப்படும் டெபாசிட்டுகளுக்கு சட்ட ரீதியில் எந்தவித பாதுகாப்பும் இல்லை என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.