உங்கள் முதலீட்டை மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் என்ன செய்யும்?
மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய முடிவு செய்து ஒரு நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அந்த முதலீடு கொண்டு என்னவிதமான நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொள்ளும் என்பதை இங்கே பார்ப்போம்.
அந்நிறுவனம் புதிதாக ஒரு பங்கை வாங்க முயலும் போது அந்நிறுவன வளர்ச்சி, நிர்வாகம், தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளும் திறமையை ஆகியவற்றை கவனிக்கின்றன.
நல்ல லாபம் தரும் பங்கில் முதலீடு செய்ய வாய்ப்பிருந்தால் மட்டுமே, அவை அதிக லாபம் தந்த மற்ற முதலீட்டு பண்டில் சிறுபங்கை விற்றுவிட்டு முதலீடு செய்யும். சில நிறுவனங்களின் நிர்வாகம் சரியின்மையால் லாபம் குறைந்தாலும் அந்நிறுவன பங்கை விற்க முயல்கிறது.
சில அசாதாரண சூழ்நிலையில் கிடைக்கும் நல்ல லாபம் தரும் பெருநிறுவன பங்குகள் அடிமாட்டு விலையில் விற்பனைக்கு வரும்போது அப்பொழுதே வாங்கி, பின்னர் அதிக லாபம் சம்பாதிக்கின்றன.
வங்கி, தகவல்தொழில்நுட்பம், சிமெண்ட், ரியல்எஸ்டேட் போன்ற துறைகளில் ஈடுபடும் நிறுவனங்களின் ஈக்விட்டி பண்டுகளில் அதிகளவு முதலீடு செய்கின்றன.
அதிக தொகை கொண்டு பண்டில் சேர முடியாதவர்கள், மாதம் ஒரு முறை செலுத்தும் எஸ்ஐபி முதலீட்டை விரும்புவதால் அவற்றை மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும் ஆதரிக்கின்றன. இம்முறையில் பெறப்படும் நீண்ட கால முதலீட்டால் வங்கி வட்டியை விட அதிக லாபம் தருகின்றன.
பொதுவாக பாசிவ் பண்டுகள் ரிஸ்க் குறைவு, லாபம் குறைவு. ஆனால் ஆக்டிவ் பண்டுகளில் ரிஸ்க் அதிகமிருந்தாலும், லாப சதவிகிதமும் அதிகம் என்பதால் லாபம் தரும் சரியான பங்குகளை வாங்கி விற்று முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை கொடுக்கவே மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் முயற்சி செய்கிறது.