அரசு சேவைகளை பெற ‘இது’ போதும்..!
இந்தியாவில் உள்ள 120 கோடி மொபைல் இணைப்புகளில் 80 கோடி ஸ்மார்ட்போன்களாக உள்ளன. ஆதார் அட்டை எடுக்கும் போது கண் கருவிழி படலம், கைரேகை போன்றவற்றை அனைத்து மக்களும் கொடுத்துள்ளார்கள்.
இதனால் கைரேகை மற்றும் கண் கருவிழி படலத்தை கொண்டு போன்களை திறக்கச் செய்யும் தொழில் நுட்பம் நடுத்தர ஸ்மார்ட்போன்களிலும் கூட அறிமுகமாகி உள்ளது.
எனவே ஸ்மார்ட் போன்களில் ஆதார் சர்வரை இணைத்து, அரசின் பல்வேறு சேவைகளை கைரேகை மற்றும் கண் விழித்திரையை கொண்டு உடனுக்குடன் உறுதி செய்வது தான் அடுத்த கட்ட திட்டமாகும்” என UIDAI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சவுரவ் கார்க் பேசியுள்ளார்.