கூகுளில் பொதுவாக தேடி சிக்காதீங்க… எச்சரிக்கும் எஸ்பிஐ..!
சமீப காலங்களில் ஆன்லைன் மோசடிகள் நிறைய நடைபெறுகின்றன. வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், ஓடிபி போன்றவற்றை வாங்கி, அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைத் திருடி விடுகின்றனர். எனவே வங்கிக் கணக்கு விஷயத்தில் வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரித்துள்ள எஸ்.பி.ஐ., “கஸ்டமர் கேர் எண், IFSC CODE போன்ற எந்த தகவலானாலும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் (www.sbi.co.in) மட்டுமே சென்று பார்க்கவும்” என்று தனது தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
பொதுவாக கூகுளில் PIN code நம்பர், வாடிக்கையாளர் சேவை எண் IFSC code போன்ற பல்வேறு விஷயங்களை தேடும் போது ஆன்லைன் மோசடி பேர்வழிகள் வங்கி சார்ந்த தரவுகளை தவறாக வெளியிட்டு வாடிக்கையாளர்களை ஈர்த்து மோசடியில் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டுள்ளது என்பதாலேயே எஸ்.பி.ஐ. இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
“எஸ்பிஐயில் அடிப்படை சேமிப்பு கணக்கு (BSBD)) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை” என்றும் எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது