கேஸ் விலை உயர்வுக்கு கவலை வேண்டாம் சந்தைக்கு வரும் சூரிய ஒளி அடுப்பு
வீட்டு உபயோக கேஸ் நாளுக்கு நாள் விலையேறும் நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் சூரிய ஒளி மூலம் இயங்கும் அடுப்பை உருவாக்கியுள்ளது. சூரியா நுடன் என பெயரிடப்பட்டுள்ள இந்த அடுப்பை சூரிய ஒளி படும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டியதில்லை. சூரிய சக்தியை சிறப்பு இயந்திரம் மூலம் வெப்பசக்தியாக மாற்றி பேட்டரியில் சேமிக்கப்பட்டு சூரிய அடுப்பை இயக்கிக்கொள்ளலாம். இன்னும் 3 மாதங்களில் விற்பனைக்கு வரும் நிலையில் இதன் விலை ரூ.12,000 வரை இருக்கலாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.