வரி கணக்குகள் தாக்கல் செய்ய காலக் கெடு நீட்டிப்பு
வரி செலுத்துவோரும் இதர சம்பந்தப்பட்டவர்களும் சில வரிக்கணக்கு படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்படுவதாகப் புகார் அளித்ததை தொடர்ந்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வரி கணக்கு படிவங்களை தாக்கல் செய்வதற்கான தேதியை நீட்டித்து அறிவித்துள்ளது.
நேரடி வரி தொடர்பாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காணும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள “விவாத் ஸே விஸ்வாஸ்” திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்துவதற்கான தேதி செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வட்டித் தொகையுடன் சேர்த்து அக்டோபர் 31க்குள் கட்டணம் செலுத்தலாம்.
ஓய்வூதிய நிதியில் முதலீடு செய்வதற்கான கெடு ஜுலை 31ல் இருந்து நவம்பர் 30ம் தேதி வரையிலும் தங்க முதலீட்டு பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கெடு அக்டோபர் 31இல் இருந்து டிசம்பர் 31ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல், படிவம் 15ஜி, 15ஹெச் ஆகியவற்றைத் தாக்கல் செய்வதற்கான தேதி முறையே நவம்பர் 30, டிசம்பர் 31 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.