இனி ஆன்லைன் மூலம் வாடகை செலுத்தலாம்
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அறநிறுவனங்களுக்கு சொந்தமான அசையாச் சொத்துக்கள் தொடர்பாக அந்தந்த அறநிலையங்களில் பேணப்படும் கேட்பு, வசூல், நிலுவை பதிவேட்டின் விவரங்கள் அனைத்தும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மேலும், குத்தகைதாரர், வாடகைதாரர்களால் செலுத்தப்படும் குத்தகை, வாடகை தொகைக்கு அச்சடித்த ரசீது வழங்கும் முறையினை ரத்து செய்து செப்டம்பர் 1ம் தேதி முதல் இணையதள வழியில் அந்தந்த அறநிலையங்களின் நிர்வாகத்திற்கு குத்தகை, வாடகையினை செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்நிலையில், அனைத்து அறநிலையங்களுக்கு சொந்தமான அசையாச் சொத்துக்களின் கேட்பு, வசூல், நிலுவை தொடர்பாக விவரங்களை விடுதல் இல்லாமல் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
மேலும் கோயில்களுக்கு சொந்தமான அசையாச் சொத்துக்களை, நவீன தொழில்நுட்பத்துடன் நிலஅளவை மேற்கொள்ள வேண்டும் என்றும் மற்றொரு உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.