போக்குவரத்து ஆவணங்கள் புதுப்பிக்கும் காலம் நீட்டிப்பு..!
ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்றிதழ், பர்மிட் போன்ற மோட்டார் வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை, மத்திய போக்குவரத்து அமைச்சகம் பலமுறை நீட்டித்து அறிவித்தது. கடைசியாக புதுப்பிக்கும் கால இறுதி நாளாக மார்ச் 30 என அறிவித்திருந்தது.
தற்போது பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் போக்குவரத்து ஆவணங்களுக்கான புதுப்பிக்கும் அவகாசத்தை ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது.