Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

விளையாட்டிலும் கவனம் செலுத்துங்கள்… உலகம் உங்களை வியந்து நோக்கும்…!’

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

விளையாட்டிலும் கவனம் செலுத்துங்கள்… உலகம் உங்களை வியந்து நோக்கும்…!’

சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி நிகழ்ச்சியில் காவல்துறை கூடுதல் இயக்குநர் அமல்ராஜ் பேச்சு

சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான திருச்சி எம்.எம்.நகர் , வயலூர் ரோடு மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி வளாகத்தின் உள்ளே நீச்சல் குள உள் அரங்கமும் , துப்பாக்கி சுடுதல் பயிற்சி உள் அரங்கமும் திறந்து வைக்கப்பட்டது .

சிறப்பு விருந்தினர்களாக தாம்பரம் காவல் ஆணையர் , காவல்துறை கூடுதல் இயக்குநர் அமல்ராஜ் அவர்களும் , திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அவர்களும் கலந்து கொண்டனர் . சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் . ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் செயலாளர் செந்தூர் செல்வன் அனைவரையும் வரவேற்று பேசினார் .

Visit Kavi Furniture and get to Know about us better. Experience our Furniture First Hand in a setting designed to feel like home

நீச்சல் குளம் உள் அரங்கினை காவல் துறை கூடுதல் இயக்குநர் அமல்ராஜ் திறந்து வைத்தார்கள் . துப்பாக்கி சுடுதல் பயிற்சி அரங்கத்தினை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திறந்து வைத்தார்கள் .

“ உலகில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு துறையில் சிறப்பு வாய்ந்து சாதித்து  புகழ்ச்சி அடைய வேண்டும் என்று தான் எண்ணுவார்கள் . பிறர் நம்மை கவனிக்க வேண்டும் என்கிற தூண்டுதல் தான் அந்த உணர்வாகும் . விளையாட்டுத் துறையில் ஒருவர் நன்கு பயிற்சி எடுத்து சாதனை புரிந்தால் இந்த உலகம் அவர்களை வியந்து நோக்கும் . புகழின் உச்சிக்கு அவர்கள் செல்வார்கள் . மற்ற எந்த துறையையும் விட மாநில அளவில் , தேசிய அளவில் , உலக அளவில் விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களை தான் இந்த உலகம் வியந்து நோக்கும் . ‘ ‘ என்று தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டார் தாம்பரம் , காவல்துறை கூடுதல் இயக்குநர் அமல்ராஜ் . “ பள்ளி மாணவ மாணவியர் படிப்பிலும் சிறந்து விளங்க வேண்டும் அதே வேளையில், விளையாட்டிலும் அவர்கள் மிகசிறந்து விளங்க வேண்டும் . விளையாட்டு திறன் மேம்பாடு என்பது அவர்களை இந்த உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டும் என குறிப்பிட்டு பேசினார் திருச்சி மாநகர காவல் ஆணையர் .

வேலை பெறுவது எளிது ! தலைசிறந்த வேலைவாய்ப்பு இணைதளம்

பள்ளி வளாகத்தின் உள்ளே அமைந்துள்ள நீச்சல் குளம் திறந்தவெளி யில் இல்லாமல் ஓர்  நவீன உள் அரங்கமாக கட்டமைக் கப்பட்டுள்ளது . நீச்சல் குளத்தின் நீளம் 25 மீட்டர். அதன் அகலம் 13.5 மீட்டர் , தண்ணீர் நிற்கும் ஆழம் 4.5 அடி உயரம் . இந்த அரங்கில் சுமார் 500 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதியும் உள்ளது . இந்த நீச்சல் குளத்தில் மூன்றாம் வகுப்புக்கு மேல் பன்னிரென்டாம் வகுப்புக்கு உட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு நீச்சல பயிற்சி தரப்படும் . கிட்ஸ்-களுக்கான சிறிய நீச்சல் குளம் ஒன்றும் இங்கே அமைந்துள்ளது . 6 மீட்டர் விட்டமும் . 12 மீட்டர் சுற்றளவும் 2.5 அடி ஆழமும் கொண்டது சிறிய நீச்சல் குளம் . சிறிய நீச்சல் குளம் எல்.கே.ஜி முதல் 2 – ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு நீச்சல் பயிற்சி தரப்படும் . பெரிய நீச்சல் குளத்தில் 3 ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியருக்கு நீச்சல் பயிற்சி தரப்படும் .

குறிப்பாக மாணவர்களுக்கு தனியாகவும் மாணவியர்களுக்கு தனியாகவும் நேர ஒதுக்கீடு செய்யப்பட்டு நீச்சல் பயிற்சி தரப்படும் . இதனை பள்ளியில் ஒவ்வொரு வகுப்புக்கும் வாரத்தில் ஒரு நாள் மணி நேர பயிற்சி வகுப்பாக அட்டவணை அட்டவணை போடப்பட்டுள்ளது . இந்த பயிற்சி நேரத்தில் மாணவ மாணவியருக்கு அடிப்படை நீச்சல் பயிற்சியும் தற்காப்பு பயிற்சியும் தரப்படும் .

இது இல்லாமல் நீச்சலில் சிறந்து விளங்கும் மாணவ மாணவியரைத் தேர்வு செய்து அவர்களுக்கு மாலை 4. மணிமுதல் 5 மணி வரை சிறப்பு நீச்சல் பயிற்சி அளிக்கப்படும் . தகுதியும் திறமையும் மிக்க நீச்சல் பயிற்சியாளர் ஒருவர் . நீச்சலின் போது மாணவ மாணவியருக்கு ஏதேனும் தடுமாற்றம் ஏற்பட்டால் அப்போது அவர்களை உடனே தடுமாற்றத்தில் இருந்து சரி செய்ய நீச்சல் காப்பளராக ஆக இரண்டு ஆண்களும் , இரண்டு பெண்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் .

தனி ஒரு கட்டிடத்தில் உள் அரங்கமாக உலகத்தரம் வாய்ந்த 10 மீட்டர் தூர ஏள் ரைபில் , பீஸ்டல் சூட்டிங் ரேஞ்சும் அமைந்துள்ளது . துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் உள்ள மாணவ மாணவியருக்கான அரங்கு அது . துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் பங்கேற்கும் மாணவ மாணவியர்க்கு மனதினை ஒருமுகப்படுத்தும் நன்மையும் அது தரக்கூடியது .  மாணவ மாணவியரை எந்த ஒரு விஷயத்திற்கும் பதட்டப்படாத உள் மன ஆற்றலை ஊக்குவிக்கக் கூடியது இந்த துப்பாக்கி சுடுதல் பயிற்சியாகும்.

இதே அரங்கில் டேபிள் டென்னிஸ் கோர்ட் , கேரம் போர்டு , செஸ் விளையாட்டு வசதிகளும் உள்ளன “ . என்று கூறுகிறார் சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் செயலாளர் செந்தூர் செல்வன் .

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.