அலுவலகத்தில் பதவி உயர்வுக்கு கையாள வேண்டிய உத்திகள்!
பதவி உயர்வு பற்றி அலுவலகங்கள் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பல விதமான சிந்தனைகள் எண்ணங்கள் இருக்கும். ‘அவனுக்கு ஒன்றும் தெரி யாது. அவனுக்கெல்லாம் பதவி உயர்வு கிடைக்குது. எனக்குக் கிடைக்க மாட்டேன் என்கிறதே’ எனச் சிலர் வாய்விட்டுப் புலம்புவதையும், இன்னும் சிலர் மனதில் புகைந்துகொண்டிருப்பதையும் அலுவலகத்தில் பார்க்கலாம். ‘நன்கு வேலை செய்வதோ, கஷ்டப்பட்டு உழைப்பதோ பதவி உயர்வுக்கு வழிவகை செய்யாது, பதவி உயர்வுகள் எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டிய விஷயம்.
பொறுப்பை கையாளும் திறமை…
கஷ்டப்பட்டு அதிக நேரம் உழைத்து நம்முடைய உயரதி காரியின் பார்வையில் பட்டு அவருடைய மனம் குளிர்ந்தால் பதவி உயர்வு என்பது கிடைத்துவிடும் என்று நாம் நினைப்போம். ஆனால் உங்களுடைய நேரடியான மேலதிகாரியும், அவருடைய மேலதிகாரிகளும் உங்களுக்கு எதிர்காலத்தில் தரப்படும் பொறுப்புகளைச் சிறப்பாகக் கையாளும் திறமை இருக்கிறது என்று நம்பும் சூழலிலேயே உங்களுக்கு பதவி உயர்வு தரப்படுகிறது.
யாரைத்தெரியும் என்பதே முக்கியம்…
நிறுவனங்கள் எப்போதும் தகுதி மற்றும் திறமையை முன்னிறுத்தி மட்டுமே செயல்படுவதில்லை அல்லது முடிவுகளை எடுப்பதும் இல்லை. அலுவலக அரசியல் என்பது இதில் முன்னிலை வகிக்கவே செய்யும். பதவி உயர்வுக்கு உங்களுக்கு என்ன தெரியும் என்பது முக்கியமில்லை. உங்களுக்கு யாரைத் தெரியும் என்பதுதான் முக்கியம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.
சரியான செயல்பாடுகள்…
கடினமாக உழைப்பது, மற்றவர்களுடைய பார்வையில் உங்களுடைய உழைப்பும் பங்களிப்பும்படுவதைப்போல் நடந்துகொள்வது போன்றவையெல்லாம் சரியான செயல்பாடுகளே.
விசுவாசம் முக்கியம்….
பதவி உயர்வு கிடைக்காமல் போய் அதனால் வேலை மாறிக்கொண்டே போனால், உங்கள் பயோடேட்டாவை படித்து, எதிர்காலத்தில் புதிய நிறுவனத்தின் அதிகாரி உங்களை ஒரு விசுவாசம் இல்லாத நபராக உங்கள் அலுவலக நிர்வாகம் கருதிவிடவும் நிறைய வாய்ப்புள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.
பதவி உயர்வு பெற சிறந்த வழி…
‘‘வெறுமனே கடின உழைப்பை தருவது என்பது மட்டுமே பதவி உயர்வுக்கு உதவும் ஒரு விஷயமாக இருக்காது. உங்களுடைய வேலையையும் திறமையையும் வெளி உலகுக்கு வெளிப்படுத்தும் நபராக நீங்களே இயங்குங்கள். அலுவலகக் கூட்டங்களில் அவ்வப்போது பேசுங்கள். நீங்கள் இருப்பதை உணர்த்துவதிலும் உங்களால் என்ன பலன்கள் இருக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தும்படி நடந்துகொள்ளுங்கள்.
நீங்கள் ஒரு காரியத்தில் ஈடுபடுத்தப்பட்டால் அதில் வேறெ லெவலில் எனர்ஜி இருக்கிறது என்பதை நிரூபியுங்கள். தோல்விகள், சிக்கல்கள் போன்ற வற்றால் துவண்டுபோகாமல் எதிர்த்து நின்று அடித்து ஆடும் நபர் நீங்கள் என்பதை அனைவருக்கும் காட்டுங்கள்.
வெற்றி வந்தால் பெரியதாக ஆடாமலும் தோல்வி வந்தால் துவண்டு போய் விடாமலும் ‘இதெல்லாம் ஒரு அனுபவம்தான்’ என்று சொல்லி சீரான நடத்தையுடன் செயல்படுங்கள். இவைதான் உங்களுக்குப் பதவி உயர்வைக் கொண்டுவருவதற்கான முக்கிய காரணிகளாக இருக்கும்.