பிசினஸ் சந்தேகங்களுக்காக…
படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?
வேலைக்கு செல்வதற்காகத்தான் படிப்பு என்பது அவநம்பிக்கை. படித்து பரீட்சை எழுதுவது தேர்ச்சி மற்றும் மதிப்பெண் பெறவே. படிப்பு எதுவாக இருந்தாலும் மனத்திடமும், தன்னம்பிக்கையும் இருந்தால் பலருக்கு வேலை தரும் தொழிலை தேர்ந்தெடுக்கலாம்.
எதை செய்வதாக இருந்தாலும் தகுதி வேண்டும் என்று சொல்கிறார்களே, தகுதிக்கு விளக்கம் வேண்டும்.
தன்னை முதலில் தான் அறிவதே தகுதி. த&தன்னம்பிக்கை, கு&குறிக்கோள், தி&திறன், திறமை, இந்த மூன்றும் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. அதை வெளிக்கொண்டுவர வேண்டும். இதை வெளிப் படுத்திப் பாருங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாவீர்கள்.
தொழிலுக்கு தேவையான முதலீட்டு வசதி இல்லாதவர்கள் என்ன செய்வது?
செய்தொழில் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொண்டு நம்பிக்கையோடு அந்த தொழிலை தேர்ந்தெடுத்த உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட துறைகளை அணுகினால் நிச்சயமாக முதலீட்டு வசதிகளை பெற்று தொழில்களை துவங்கலாம்.
தொழிலுக்கும், வேலைக்கும் என்ன வேறுபாடு?
வேலை என்பது ஒரு குறிப்பிட்ட வயது வரை தான் அனுமதிக்கப்படும். தொழில் என்பது உயிர் உள்ள வரை மனஉறுதி உள்ளவரை சம்பாதிக்கலாம்.
எந்த தொழிலை தேர்ந்தெடுக்கலாம் என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
இதற்கு பதில் உங்களிடம் தான் உள்ளது. இல்லையெனில் டிடிட்சியாவிற்கு வாருங்கள்.