குடும்பத்திற்காக… அறிய வேண்டிய தகவல் :
பேமிலி ப்ளோட்டர் பாலிசி ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி குழந்கைளுடன் மாமனார், மாமியார் என குடும்பமாக உள்ள வீட்டில் அனைவருக்கும் சேர்த்து ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க முடியுமா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது.
ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியைப் பொறுத்த வரையில் கணவன், மனைவி, குழந்தைகள் என ஒரு பாலிசியும், மாமனார், மாமியாருக்கு என வேறு ஒரு பாலிசியும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஐந்து பேருக்கும் சேர்த்து ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி அனைத்து நிறுவனங்களிலும் இல்லை. சில நிறுவனங்களில் மட்டு மே உள்ளது. அப்படி எடுக் கும்போது வரும் பிரச்னை என்னவென்றால் அதிக வயது யாருக்கோ அவருடைய வயதைப் பொறுத்து ஐந்து பேருக்கும் சேர்த்து பிரீமியம் அதிகமாக வரும்.
அதனால் உங்களுக்கும் மனைவி குழந்தைகளுக்கும் தனியாகவும், உங்கள் அப்பா மற்றும் அம்மாவுக்கு தனியாக ஒரு ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசியும் எடுத்துக்கொள்வது நல்லது.