Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை…

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை…

3
  •  ஏற்கெனவே குறிப்பிட்டபடி, பணத்தைப் பெறுபவரின் வங்கிக் கணக்கு விவரங்களை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்த பின், உங்கள் வங்கிக் கணக்கில் ரிஜிஸ்டர் செய்து, பிறகு, பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும்.
  •  பெரிய தொகையை டிரான்ஸ்ஃபர் செய்யும் முன் முதலில் ஒரு சிறுதொகையை ரூ.50, ரூ.100 என்று டிரான்ஸ்ஃபர் செய்து சம்பந்தப்பட்டவர் களிடம் உறுதி செய்துகொண்டு விட்டு, பிறகு மீதியுள்ள பெரும் தொகையை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.
  •  பணம் டிரான்ஸ்ஃபர் செய்த பிறகு, அந்த ஸ்க்ரீன் ஷாட்டையோ, உங்களுக்கு வரும் குறுஞ்செய்தியையோ சம்பந்தப் பட்டவருக்கு அனுப்பி உறுதி செய்துகொள்வது நல்லது.
  •  நமது வங்கிக் கணக்கில் நடைபெறும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையின்போதும் நமக்கு நம்முடைய மொபைல் நம்பருக்கு குறுஞ்செய்தி வருவதுபோல், வங்கிக் கணக்கில் கண்டிப்பாகப் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • தவறுதலாக பணம் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு விட்டால் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, முதலில் அந்தத் தவறு நடந்ததற்கான ஆதாரங்களைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  •  சம்பந்தப்பட்ட வங்கியிடம் புகார் அளித்தும் பலனில்லை எனில், ஆர்.பி.ஐ ஆம்புட்ஸ்மேன் பிரிவுக்கு புகார் அளிக்கலாம். இந்தப் புகாரை ஆன்லைன் மூலமாகக்கூட செய்யலாம்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.