ஆரோக்கிய உணவு தயாரிக்க இலவச பயிற்சி வழங்கும் ‘நலமுடன்’ புவனேஸ்வரி’
உணவே மருந்து என்பதை நமது முன்னோர்களின் உணவு பழக்கங்களே நமக்கு உணர்த்தும். இன்றைய மக்கள், காலஓட்டத்தில் சுவையைத் தாண்டி, ஆரோக்கியத்தில் கவனம் கொண்டு உணவு உண்ணும் பழக்கம் வெகுவாக மாறிவிட்டது.
‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்று கூறவதுண்டு. டெங்கு, கொரோனா போன்ற நோய் தாக்குதல்கள், நமது உடல் ஆரோக்கியத்தின் மீதான அக்கறையை, நாம் அனைவரும் உணரச் செய்து, அதற்கான தேடலை நோக்கிய திசையில் நமது பயணத்தை மாற்றியுள்ளது. அத்தகையதோர் பயணத்தின் மூலம் கண்ட நற்பயன்களை என்னுடன் மட்டுமே கொள்ளாமல் அனைவரும் அறியச் செய்யும் சீரிய பணியில் களம் காணும், ‘நலமுடன்’ மரச்செக்கு ஆலையின் உரிமையாளர் புவனேஸ்வரி அவர்களை சந்தித்து உரையாடினோம்.
“சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் ஆரோக்கியமின்மை காரணமாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றேன். எந்தவித முன்னேற்றம் ஏற்படாததால் சிறந்த மருத்துவர்கள் என்று கூறப்படும் பலரையும் சென்று பார்த்து சிகிச்சை பெற்றேன். பலனில்லை.
வீடியோ லிங்
அந்த சமயத்தில் திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள ஒரு மரச்செக்கு ஆலைக்கு சென்றேன். தரமான மூலப்பொருட்களை கொண்டு சுத்தமான எண்ணெய் தயாரிப்பு முறையை அப்போது தான், முதன்முறையாக பார்க்கிறேன். அது எனக்கு பெரும் பிரமிப்பையே தந்தது. எவ்வளவு எளிதான, சுத்தமான, ஆரோக்கியமாக பெறக்கூடிய எண்ணெய்யை விட்டுவிட்டு பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யக்கூடிய எண்ணெய்யை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமே என்று தோன்றியது. தொடர்ந்து, அவரிடமே எண்ணெய் வாங்கி பயன்படுத்த தொடங்கினோம். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருப்பதை நானே உணர்ந்தேன்.
இதையடுத்து சில நண்பர்களுடன் இணைந்து மூட்டையாக கடலை எடுத்து செக்கில் எண்ணெய்யாக்கி பிரித்துக்கொண்டோம். ஒரு வருடத்திற்கு மேலாக அவ்வாறே செய்து கொண்டிருந்தோம். பின்னர், திருச்சி, கே.கே.நகர் செல்லும் வழியில் உள்ள இந்தியன் வங்கி காலனியில், ‘நலமுடன்’ என்ற பெயரில், ஒரே ஒரு இயந்திரத்தைக் கொண்டு மரச்செக்கு ஆலையினை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கினோம்.
வீடியோ லிங்
ஆரம்பத்தில் செக்கு இயக்கத்திற்கு ஆட்களை நியமித்தோம். தொடர்ந்து நானும் கற்றுக்கொண்டேன். தொடக்கத்தில் எண்ணெயின் தன்மை சரியில்லை, சுவையில்லை என்றெல்லாம் எதிர்மறை கருத்துக்கள் வந்தன. சில நேரங்களில் ரிட்டனும் வந்தது. அவர்கள் அப்படி சொன்னதற்கான காரணங்களை ஆராய்தோம். பலரும் பாக்கெட் எண்ணெய்யை பயன்படுத்தி பழக்கப் பட்டதால் சுத்தமான எண்ணெய்யின் சுவையினை ஏற்க மறுக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டோம்.
பாக்கெட் எண்ணெய்க்கும், மரச்செக்கு எண்ணெய்க்குமான வேறுபாடுகளை மக்களுக்கு எடுத்துரைத்தோம். இது குறித்து அவர்களும் சமூகவலைதளங்களில் கண்டு புரிந்து கொண்டார்கள். உண்மையைச் சொல்லப்போனால், செக்கு எண்ணெய்யைப் பற்றி மக்களை விழிப்புணர்வு அடையச் செய்ததில் சமூக வலைதளத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. தற்போது வரையில் வாட்ஸ்ஆப் மூலம் தான் வியாபாரம் பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.
எண்ணெய்யுடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்து சொந்த தயாரிப்புகளில் இயற்கை முறையில் தயாரிக்கப் பட்ட அன்றாடப் பயன்பாட்டு பொருட்களை கொடுப்போம் என்ற முடிவு செய்தோம். தற்போது, கலப்படமற்ற உடன் குடி கருப்பெட்டி மற்றும் நாட்டு எள்ளு சேர்த்தும், இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட கரும்பில் இருந்து எடுக்கப்படும் தேவாமிர்த வெள்ளம் கொண்டும் நல்லெண்ணையை இரண்டு முறையில் ஆட்டுகிறோம், சுத்தமான நாட்டுக்கடலை கடலை எண்ணெயும், தரமான தேங்காயை காயவைத்து அரைத்தும் மற்றும் இளஞ்சூட்டில் வறுத்தும் தேங்காய் எண்ணெய்யை இரண்டு முறையில் ஆட்டுகிறோம். இரண்டாவது முறைக்கு ரோஸ்டட் கோகனட் ஆயில் என்று பெயர். கேரள முழுவதும் அந்த எண்ணெய் தான் பயன்படுத்துகின்றனர். அது தேங்காயின் உண்மை சுவையை நமக்கு தருகிறது. உடலுக்கும் நன்மை செய்கிறது.
வீடியோ லிங்
ஆமணக்கு எண்ணெயை பொறுத்தவரை பாரம்பரிய முறைப்படி நன்கு கொதிக்க வைத்த நீரை முத்தின் மீது ஊற்றி அதை சூட்டுடன் செக்கில் போட்டு ஆட்டுகிறோம். எண்ணெய் வந்ததற்குப் பிறகு பழங்கால முறைப்படி மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் ஊற்றி சீம்பால் பதத்திற்கு நன்கு காய்ச்சி எண்ணெயை எடுக்கிறோம். சுத்தமான ஆமணக்கு எண்ணெய் உடலுக்கு அவ்வளவு குளிர்ச்சியைத் தருகிறது. இதேபோன்று இலுப்பை எண்ணெயும் நம்மிடம் கிடைக்கிறது.
எங்களிடம் இரண்டு விதமான ஹேராயில் உள்ளது. ஒன்று 13 வகை மூலிகைப் பொருட்களைக் கொண்டும் மற்றொன்று கரிசலாங்கண்ணி, குன்றின் மணி, நல்லெண்ணெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுபவை. முடிகொட்டுதல், முடிவளர்ச்சி இல்லாமல் இருப்பவர்கள் இந்த ஆயிலை பயன்படுத்தினால் நல்ல பலன்களை கொடுக்கும். சித்தர்கள் புத்தகத்தில் இருக்கும் குறிப்புகளின் அடிப்படையில், அவற்றில் குறிப்பிடும் பொருட்களைக் கொண்டு, பாரம்பரிய முறைப்படி பல்பொடி செய்து கொடுக்கிறோம்.
அதேபோல் குளியல் சோப்புகளை பொறுத்த வரையில், தேங்காய் எண்ணெய் சோப்பு, புங்க எண்ணெய் சோப்பு, கஸ்தூரி மஞ்சள் சோப் இவை மூன்றும் தோல் நோய்களுக்கு மிகவும் சிறந்தவை.
அடுத்தபடியாக குளியல் பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, விராலி மஞ்சள் பொடி என மூன்று வகையான குளியல்பொடி உள்ளது. இவற்றில், குளிக்கும்பொழுது பொடுகு உள்ளிட்ட எந்த ஒரு தொந்தரவும் தலைமுடிக்கு வராது. அதேபோல், ஏமா எண்ணெய் சளி, காய்ச்சல், உடல் வலி போன்றவைகளுக்கு சிறந்த மருந்தாகும்.
வாதம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மூட்டுவலி தைலம் சிறந்த நிவாரணியாக உள்ளது. ஹீமோகுளோபினை அதிகரிக்க கூடிய பீட்ரூட் மால்ட் செய்கிறோம். பீட்ருட் மால்ட் செய்வதற்கு ஒரு வாரம் நேரம் பிடிக்கும் ஒரு வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இது குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் சிறந்தது.
வீடியோ லிங்
எங்களுடைய 4 வருட பயணத்திற்குப் பிறகு இயற்கையான முறையில் விளைவிக்கக்கூடிய விவசாயிகளை கண்டறிந்து அவர்களிடமே தொடர்ந்து அரிசி மற்றும் சிறுதானியங்கள் வாங்குகிறோம். பச்சரிசி, மாப்பிள்ளை சம்பா, கவுனி, சேலம் சன்னா, மைசூர் நல்லா சிவன் சம்பா, தங்க சம்பா, சொர்ணம் மசூரி, கருப்பு உளுந்து, தோல் உளுந்து, வெள்ளை உளுந்து, பாசிப்பயிறு, உளுந்தம் பயிறு, வரகு, திணை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களும் எங்களிடம் கிடைக்கும். கவுனி, சம்பா, மாப்பிள்ளை சம்பா ஆகியவற்றை புட்டுமாவுகளாகவும் தருகிறோம்.
ஸ்னாக்ஸ்களை பொருத்தவரையில் ரோஸ்டர் கோகனட் ஆயில், வறுக்கப்பட்ட சிப்ஸ்கள் கிடைக்கின்றன. திணை, கம்பு, பாசிப்பயறு உள்ளிட்டவைகளில் லட்டுகளைத் தருகிறோம். கலப்படமில்லாத பனங்கற்கண்டு, சுத்தமான நாட்டு சர்க்கரை மற்றும் சுக்கு கருப்பட்டி, சில்லுக்கருப்பட்டி, மண்டை கருப்பட்டி ஆகியவை எந்த கலப்படமும் இல்லாமல் தேர்ந்தெடுத்து கொடுக்கிறோம். மேலும் மிளகாய் பொடி, சாம்பார் பொடி, எள்ளுப்பொடி உள்ளிட்டவைகளை வாரம் ஒருமுறை அரைத்து தேவைக்கு ஏற்றாற்போல் விற்பனை செய்து வருகிறோம்.
எங்களுடைய தயாரிப்பு மற்றும் விற்பனைப் பொருட்களுக்கு நாங்களே முதல் நுகர்வோர். நாங்கள் திருப்தி அடைந்தால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம். எந்த நேரத்திலும் இரசாயனம் கலந்து நஞ்சை மக்களுக்கு தந்துவிடக்கூடாது என்பதில் விழிப்புடன் உள்ளோம்.
எங்களுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பாண்டிச்சேரி, பெங்களுர் மற்றும் வடமாநிலங்களிலும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். என்னுடன் உதவியாக விஜயகுமாரி, கார்த்திகேயன், சுலோசனா ஆகியோரின் உழைப்பும், பணியாளர்களைத் தாண்டிய உறவுமுறைகளுடனே எங்களின் பழக்கம் இருப்பதால் மட்டுமே இவ்வளவு பொருட்களின் தயாரிப்பு சாத்தியமாகிறது.
வீடியோ லிங்
எங்கள் தயாரிப்புகளை மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன் ஒவ்வொரு வாரமும் நாலாவது சனிக்கிழமை இலவசமாக பயிற்சி வகுப்புகளை நடத்துகிறோம். எங்களிடம் இதுவரையில் 10க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று சொந்தமாக மரச்செக்கு ஆலை வைத்துள்ளனர். பயிற்சிகள் மட்டுமல்லாது அவர்கள் தொழில் தொடங்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் திட்டங்களாக வகுத்துக் கொடுக்கிறோம்.
“எவ்வளவு எளிதான, சுத்தமான, ஆரோக்கியமாக பெறக்கூடிய எண்ணெய்யை விட்டுவிட்டு பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யக்கூடிய எண்ணெய்யை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதையும், பலரும் பாக்கெட் எண்ணெய்யை பயன்படுத்தி பழக்கப்பட்டதால் சுத்தமான எண்ணெய்யின் சுவையினை ஏற்க மறுக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டோம்.”
– ச.பாரத்