Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

பாஸ்ட் புட் தயாரிக்க இலவச பயிற்சி..!

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில், ‘துரித உணவுகள் தயாரிப்பது’ பற்றிய பயிற்சியினை 10 நாட்களுக்கு இலவசமாக வழங்குகிறது. பயிற்சி பெற முதல் தகுதி அந்த நபர் கிராமப்புற வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள இளைஞராக இருக்க வேண்டும்.

வருகிற 13ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் 90 சதவீதம் செய்முறையுடன் கூடிய இந்த பயிற்சி வழங்குவதோடு வங்கிக் கடன் பெற முழு ஆலோசனை வழங்கப்படுகிறது. பயிற்சி பெற விரும்புவோர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 20 வயதிற்கு மேல் 40 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

3

பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நூறு நாள் அட்டை. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ், மாற்று சான்றிதழ், வங்கி புத்தகம் மற்றும் பான்அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் 3 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தையும் கொண்டு வர வேண்டும்.

பயிற்சி போது காலை, மதிய உணவு மற்றும் தேநீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நேரில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரம் அறிய : 0431-2412825, 99947 37185, 73975 12544 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.