திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் உதயமாகிறது கருடா ஸ்கேன்ஸ்.. வீடியோ
திருச்சி புத்தூர் சிந்தாமணி எதிரில் உள்ள சந்தானம் டவரில் 24 மணி நேரம் செயல்படும் கருடா ஸ்கேன் திறப்பு விழா (10.08.2022) நாளை நடைபெறுகிறது. அனைத்து நவீன ஸ்கேன் வசதிகள், MRI Scan, CT Scan, Digital X Ray, Ultrasound Scan, Echo, Colour Doppler ஒரே இடத்தில் நோயாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு திறக்கப்பட உள்ளது.
மேலும், கருடா ஸ்கேன்ஸின் சிறப்பம்சங்கள் குறித்து நிர்வாக இயக்குனர் டாக்டர். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
இங்கு MRI Scan 20 நிமிடத்தில் எடுத்து விடலாம். மேலும், சப்தம் குறைவானதாக இருக்கும், உடனுக்குடன் Report செய்ய மருத்துவர்கள் குழு உள்ளது. படங்கள் துல்லியமாக தெள்ள தெளிவாக இருக்கும். கருடா ஸ்கேன்ஸ் 24 மணி நேரமும் இயங்கும் வண்ணம் அமைந்துள்ளோம், அவசர ஊர்தி (Ambulance) வசதியும் உள்ளது.
இங்குள்ள MRI Scan ல் நரம்பியல் சம்மந்தமான புதிய தொழில் நுட்பம் உள்ளதால் அனைத்து வியாதிகளையும் கண்டறிய முடியும். உதாரணமாக ஒருவருக்கு மூளையில் கட்டி இருந்தால் அவரை கை கால்களை ஆட்ட சொல்லியும், பேச சொல்லியும் Scan எடுக்கலாம். இதனால் அறுவை சிகிச்சை / மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது பாதுகாப்பாக சிகிச்சை செய்ய முடியும் (Functional MRI) மூளையின் எந்த பகுதியில் இரத்த அடைப்போ, கசிவோ ஏற்பட்டால் 15 நிமிடத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் விரைவாக குணமடைய முடியும்.
(MRI Perfusion Scan) தலைக்காயம் ஏற்பட்டு மூளை திரவ கசிவு (CSF Leakage) ஏற்பட்டால் அதை துல்லியமாக கண்டறிவதன் மூலம் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் வெற்றிகரமாக செயல்படமுடியும். மூளைப்பகுதியல் TB நோய் ஏற்பட்டால் அதற்கு Spectroscopy முறையில் MRI Scan செய்து எளிதாக கண்டறியலாம் என்ற நவீன பயன்பாடுகள் உள்ளன.
நவீன MRI Scan மூலம் தண்டுவட நோய்கள், உடலின் எந்த பகுதியில் சதை பகுதியில் ஏற்படும் பாதிப்புகள், முட்டி பகுதியில் ஏற்படும் பாதிப்புகள், வயிற்றில் கணையம், ஈரல், பித்தப்பை, பித்தக்குழாய் பகுதியில் ஏற்படும் பாதிப்புக் துல்லியமாக அறியலாம். பெண்களுக்கு மார்பக கட்டிகள், கர்பப்பை கட்டிகளில் ஏற்படும் புற்று நோய் பாதிப்புகள் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
காது, மூக்கு, தொண்டை பகுதியில் ஏற்படும் பாதிப்புகள், கட்டிகளையும் எளிதாக Diagnosis செய்ய முடியும். MRI Scan Radiation இல்லாத பாதுகாப்பான இயந்திரமாகும். கருடா ஸ்கேனில் இரத்தப் பரிசோதனைகள், உடல் உறுப்பு முழு பரிசோதனைகள் (Master Health Checkup) அனைத்தும் செய்யப்படும்.
CT Scan மூலம் வயிற்றுப்பகுதி மற்றும் உடல் பகுதியில் கட்டிகள் இருந்தால் திசு பரிசோதனை செய்யலாம். இரத்தக் குழாய் அடைப்பு மற்றும் கசிவுகள் உடலின் எந்தப் பகுதியில் ஏற்பட்டாலும் கண்டறியலாம்.
மற்ற மருத்துவமனைகளில் இருப்பவர்களுக்கு அழைத்துவர இலவச அவசர ஊர்தி (Ambulance) வசதி 24 மணி நேரமும் உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு Antenatal Scan செய்ய சிறப்பு ஏற்பாடுகள் தனியாக செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டாயம் முன்பதிவு அவசியம் . மேலும், சலுகை கட்டணத்திலும் ஸ்கேன் செய்யப்படும் என்றார்.