சாதாரண போனில் கூட பேமெண்ட் ஆப் வசதி போட்டி போடும் பெரும் நிறுவனங்கள்
ரிசர்வ் வங்கி அனுமதி அளித்த New Umbrella Entity (NUE) திட்டத்தின் கீழ் டாடா சன்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, ஏர்டெல் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து மக்களுக்கு நவீன பணப் பரிமாற்ற சேவையை அளிக்க யுனிவெர்சல் பாயின்ட் ஆப் சேல்ஸ் சிஸ்டத்தை இயக்க திட்டமிட்டுள்ளது.
யூனிவெர்சல் பேமெண்ட் ஐடி கொண்ட ஒருவர் எந்தப் போன் வாயிலாகவும் பேமெண்ட்-ஐ செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்திய கிராமங்களில் இது நாள் வரையில் செல்ல முடியாமல் இருக்கும் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளை வெறும் பியூச்சர் போன்கள் மூலமாகவே செய்ய முடியும் அளவிற்கு இந்தத் திட்டத் தை உருவாக்கி வருகிறது டாடா சன்ஸ் தலைமையிலான கூட்டணி.
New Umbrella Entity உரிமம் பெற டாடா தலைமையிலான கூட்டணி மட்டும் அல்லாமல், ரிலையன்ஸ், அமேசான், பேடிஎம் என பலரும் போட்டிப் போட்டு வருகின்றனர்.