டி.வி.எஸ். மோட்டார் தயாரிப்புகளை பிரபலமாக்க
ரால்ஃப் ஸ்பெத்..!
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவராக உள்ள வேணு சீனிவாசன் நிறுவனத்தின் தலைவர் (எமிரேட்டஸ்) பொறுப்புக்கு மாறும் நிலையில், ஜே.எல்.ஆர் ஜாகுவார் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ரால்ஃப் ஸ்பெத் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை ஏற்க உள்ளார்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் தயாரிப்புகளை சர்வதேச அளவில் பிரபலமாக்கியதன் பின்புலமாக விளங்கியவர் சர் ரால்ஃப் ஸ்பெத் என்பதால் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் இலக்கை நோக்கிய பயணத்தை எட்டும் முயற்சியாக ரால்ஃப் ஸ்மித்தை இயக்குநர் குழுவில் சேர்த்துள்ளதாக டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை ஏற்பார் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைந்துள்ள ரால்ஃப் தற்போது துணைத் தலைவராக உள்ளார்.