Business Trichy- Best Platform for Owners and Consumers in Trichy

விழிப்புணர்வில் கின்னஸ் சாதனை செய்த திருவெறும்பூர் மைந்தன் MMM

விழிப்புணர்வில் கின்னஸ் சாதனை செய்த திருவெறும்பூர் மைந்தன் MMM

திரைப்பட கலைப்பணியில் சகலகலா வித்தகர் என பெயரெடுத்த “நம்மவர்“ கமல்ஹாசன், தமிழக மக்களுக்கு தன்னாலான உதவிகளை தனிப்பட்ட முறையில் செய்ததோடு மட்டுமின்றி, அரசு இயந்திரத்தின் மூலம் தமிழக மக்களுக்கு சேவை செய்திட, தேர்தல் அரசியலில் களம் காண, “மக்கள் நீதி மய்யம்” என்ற புதிய கட்சியை தொடங்கி, கடந்த 2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு, “முதல்“ தேர்தலை சந்தித்து, கணிசமான வாக்கு வங்கியுடன் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பையும், நம்பிக்கையையும் பெற்றார்.

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தமிழ் மக்களுக்கு நல்லாட்சி வழங்கிடும் நோக்குடன், தமிழக சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட, நிர்வாகத் திறனும், அர்ப்பணிப்பு உணர்வும், தொலைநோக்கு சிந்தனையும் கொண்ட வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்துள்ளார் நிறுவனத் தலைவர் கமல்ஹாசன். அத்தகைய சிந்தனையாளர்களில் ஒருவராக, திருச்சி மாவட்டம், திருவரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் பொறியாளர் எம்.முருகானந்தம்.

நண்பர்கள் வட்டாரத்தில் MMM என்றழைக் கப்படும், பொறியியல் துறையில் வல்லுநரான எம்.முருகானந்தம், கடந்த 2006ம் ஆண்டு, EXCEL MARITIME 7 LOGISTICS PVT LTD என்ற நிறுவனத்தை, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பித்து, 15 ஆண்டுகளில் EXCEL INFRA, EXCEL TRAVELS, EXCEL ENERGY, BEATS JOBS, ZEAL TOURS & EVENTS, SRI BALAJI ENGINEERING AND MD IMPEX என பல்வேறு தொழில் நிறுவனங்களை நிர்மாணித்து, எரிசக்தி துறை, மனிதவளம், ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளில் தடம் பதித்து, 24ற்கும் மேற்பட்ட இந்திய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் கிளைகளை நிறுவி, தனது அனைத்து நிறுவனங்களையும் ணிஙீசிணிலி நிஸிளிஹிறி என்ற குடையின் கீழ் கொண்டு வந்து, எக்ஸல் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ( (EXCEL GROUP OF COMPANIES, CHAIRMAN & MANAGING DIRECTOR) செயலாற்றி வருகிறார்.

B.E., B.B.A., M.B.A., MFT., PGDMM., மற்றும் MS. படிப்புகளை முடித்து சிறந்த கல்வியறிவுடன் தனது நிர்வாகத்தை திறம்பட நடத்தி வரும் எம்.முருகானந்தம் சிறு வயது முதலே சேவை மனப்பான்மை கொண்டவராக விளங்கினார்.
தனது 16வது வயதில் ரோட்டரியின் இளைஞர் அமைப்பான ரோட்டராக்ட்டில் இணைந்து கடந்த 27+ ஆண்டுகளில் ரோட்டரி சேவையுடன் ஏராளமான சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.
சர்வதேச ரோட்டரி இன்டர்நேஷனல்/USA-வின் மிக உயர்ந்த பட்ச விருதான SERVICE ABOVE SELF விருதை பெற்ற ஒரே இந்தியர் இவரே.

‘தி எக்செல் ஃபவுண்டேஷன்’ என்ற இவரது அறக்கட்டளையானது இளைஞர்கள், பள்ளி குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காகவும், ஸ்பாஸ்டிக் குழந்தைகள் வளர்ச்சிக்காகவும் செயல்படுவதோடு, மாலை நேர பயிற்சி மையங்களை ஆதரித்தும், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுதல், உடல் ஊனமுற்ற சிறுவர்கள், விபத்திற்குள்ளானவர்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக, பொருளாதார பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

மார்ச் 16-31, 2021 பிசினஸ் திருச்சி இதழில் வெளிவந்தது

எழுத்தறிவு, உறுப்பு தானம், கண் தானம், பெண்கள் தற்காப்பு, திருநங்கைகள் மீதான அன்பு, மாற்றுத் திறனாளிகள் முக்கியத்துவம், சுத்தம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட சமூகத்தின் மிக முக்கியமான விஷயங்களில் சுமார் 2,00,000 இளைஞர்களை ஈடுபடுத்தியதன் மூலம் ஒரு மில்லியனுக்கும் மேலான மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி கின்னஸ் சாதனை செய்துள்ளார்.

இளைய வயதிலேயே ரோட்டரி மாவட்ட ஆளுநராக பணியாற்றியுள்ளார். ரோட்டரி உறுப்பினர் மேம்பாடு, நிதி சேகரிப்பு மற்றும் மக்கள் தொடர்பு துறை ஆகிய மூன்று தளங்களிலும் விருதுகளை வென்ற (மொத்தம் உள்ள 40 ஆளுநர்களில்) இந்தியாவில் உள்ள ஒரே ரோட்டரி ஆளுநர் எம்.முருகானந்தம் ஆவார்.

ரோட்டரி அறக்கட்டளைக்கு இது வரை ரூ.2.17 கோடி வரை வழங்கியுள்ளார். ரோட்டரியில் தனிப்பட்ட முறையில் அதிக பட்ச நிதி வழங்கியதற்காக இந்தியாவில் ஒரு சிலரே உள்ள ARCH KLUMPH SOCIETY என்ற அமைப்பின் உறுப்பினராக ஆக உள்ளார்.

“மாறு.. மாற்று” என்ற தலைப்போடு இளைஞர்களிடையே நற்சிந்தனையை தொடர்ச்சியாக விதைத்தவர். KEEP GOING..! KEEP DOING..! KEEP GIVING என்ற தாரக மந்திரத்தை தொடர்ந்து சமூகத்திற்கு எடுத்துச் சொல்லி தானும் அதை பின்பற்றக்கூடிய ஒரு சிறந்த சமூக சிந்தனையாளர்.

திருச்சி, துவாக்குடி பகுதிகளில் உள்ள கல்குவாரி தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி அறிவு பெற ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். திருச்சியில் உள்ள 5 ஸ்பாஸ்டிக் குழந்தைகள் சேவை மையங்களை நிர்வகிக்கும், ஸ்பாஸ்டிக் சொசைட்டியின் நிர்வாக குழு உறுப்பினராகவும், திருச்சி, பி.ஹெச்.ஈ.எல். தமிழ் நடுநிலைப்பள்ளி மற்றும் செயின்ட் ஜோசப் பள்ளியின் தாளாளராகவும் செயலாற்றுகிறார். இளைஞர்களுக்கென பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள் மூலம் தலைமைத்துவ திட்டங்கள் குறித்து தமிழகம் மற்றும் சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட கூட்டங்களில் உரையாற்றி ஊக்கப்படுத்தியுள்ளார்.

கடந்த 25+ ஆண்டுகளில் அவர் மேற்கொண்ட பயணமும், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பும் அனைத்து முனைகளிலும் ஒரு உத்வேகத்தை உண்டாக்கி வருகிறது. புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் கொண்டவர். இளைஞர்களிடத்திலும், மக்களிடத்திலும் உரையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். “மாறு.. மாற்று” என்ற தலைப்போடு இளைஞர்களிடையே நற்சிந்தனையை தொடர்ச்சியாக விதைத்தவர்.

“கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளில் ஏழை, பணக்காரன் என்ற பாரபட்சத்துடன் நடத்தப்படும் சேவைகள் கண்டு எழுந்த கோபமும், சமூகத்தில் நிலவி வரும் இந்த ஏற்றத்தாழ்வினை மாற்ற என்ன செய்வது என்ற கேள்வியால் எழுந்த விளைவே மக்கள் நீதி மய்யத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாக குறிப்பிடும் எம்.முருகானந்தம், “காந்தி, காமராஜர், கக்கன் போன்றவர்களை பற்றி நாம் இன்றும் பேசி வருகிறோம். ஆனால் இன்றுள்ள அரசியல்வாதிகள் யாரைப் பற்றியும் அவர்களுடன் ஒப்பிட்டு நாம் பேச முடியவில்லை. என்ன காரணம்..? இவர்கள் மக்களுக்கான அரசாக இல்லாமல் தங்கள் குடும்ப உறுப்பினர் வளர்ச்சிக்கான அரசாக மாற்றியதே.! என ஆணித்தரமாக கூறுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.