கைகொடுக்கும் சிறு தொழில்கள்
டெம்பர் கிளாஸ்
இந்தியாவில் ஆன்லைன் கல்வியை தொடர்ந்து ஸ்மார்ட் போன் தேவை அதிகரித்திருப்பதால் அவற்றிற்கு பயன்படும் டெம்பர்க்ளாஸ் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்த டெம்பர் கிளாஸ் உயர்வெப்பநிலையில் தயாரிக்கப்படுகிறது.
இந்த டெம்பர் க்ளாஸினை ஸ்மார்ட் போனில் ஒட்ட தேவையான பசை ஒரு முக்கிய மூலப் பொருளாகும். டெம்பர் கிளாஸ் தயாரிக்க தேவையான இயந்திரத்தின் விலை ரூ.1 லட்சம் வரை கிடைக்கிறது. டெம்பர் கிளாஸ் தயாரித்து அருகாமையில் உள்ள செல்போன் கடைகளுக்கு சப்ளை செய்து வருவாய் ஈட்டலாம்.
காட்டன் பட்ஸ்
இதே போல் காதுகளை சுத்தம் செய்யும் காட்டன் பட்ஸ் தயாரிப்பது மிகவும் சுலபமானதாகும். தயாரிப்பு இயந்திரங்கள் ரூ.20 முதல் ரூ.40 ஆயிரம் விலையில் கிடைக்கிறது.
காட்டன் பஞ்சு, குச்சிகள் மற்றும் பேக்கிங் செய்யும் பொருட்களை கொண்டு காட்டன் பட்ஸ் தயாரித்து அருகாமை கடைகளில் மெடிக்கல் ஷாப்களில் சப்ளை செய்து வருவாய் ஈட்டலாம்.
டிசைனர் லேஸ்
மற்றொன்று டிசைனர் லேஸ். இதன் தேவை அதிகரித்து வரும் இன்றைய கால கட்டத்தில் வீட்டில் இருந்தே இத்தொழிலில் ஈடுபட்டு வருவாய் ஈட்டலாம். புதுமையான வகையில் டிசைனர் லேஸ் தயாரிக்கப்பட்டால் அவைகளுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
டிசைனர் லேஸ் தயாரிக்க காட்டன், பாலியஸ்டர், நைலான், பாலிப்ரொப்பிலீன் போன்றவை தேவைப்படுகிறது.
சிறிய இயந்திரங்களை கொண்டு இவற்றை தயாரிக்கலாம். இதற்கான முதலீட்டுத் தேவை ரூ.25 ஆயிரம் மட்டுமே..