மொபைல் போன் ஹேக்கர்களின் களவாடல்கள்!
உங்களை பற்றிய தகவல்கள், வங்கி விபரங்கள் போன்றவற்றை ஹேக்கர்கள் எப்படியெல்லாம் களவாடுகிறார்கள் என்பதை ஆய்வு செய்தது ஒரு நிறுவனம். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஆய்வில், 3ல் ஒரு இந்தியர், வங்கி கணக்கு விவரங்கள், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள், ஏடிஎம் பின் நம்பர்கள், ஆதார் கார்டு, பான் எண் உள்ளிட்ட முக்கிய விவரங்களை தங்களது மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டர்கள், மெயில்களில் சேமிக்கின்றனர் எனக் கூறுகிறது.
இந்தியாவில் 11% பேர் தங்களது மொபைல் போன்களில், நிதி ரீதியிலான முக்கிய தகவல்களை சேமித்து வைத்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. பாஸ்வேர்டுகள் ஷேரிங் மேலும் கிட்டதட்ட மூன்றில் ஒருவர் தங்களது முக்கிய பாஸ்வேர்டுகளை, தங்களது குடும்பத்தில் உள்ள 1 அல்லது பலரிடம் ஷேர் செய்வதாக ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றது.
ஆய்வில் பதிலளித்தவர்களில், வங்கி கணக்கு விவரங்கள், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, சிவிவி, ஏடிஎம் பாஸ்வேர்டுகள், ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற முக்கிய விவரங்களை 7% பேர் தொலைப்பேசியிலும், 15% பேர் மெயில் அல்லது அவர்களது கணினியிலும், 11% பேர் மொபைல், ஈமெயில் அல்லது கணினியிலும் சேமித்து வைப்பதாக கூறியுள்ளனர்.
21% பேர் தங்களது நிதி ரிதீயிலான முக்கிய தகவல்கள் அனைத்தையும் நினைவில் வைத்துள்ளதாகவும், 39% பேப்பர் வடிவத்திலும் வைத்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் 7% பேர் எந்த கருத்தும் தெரிவிக்க விருப்பமில்லை என்றும் கூறியுள்ளனர். ஆக மொத்தத்தில் 33% பேர் தங்களது முக்கிய ஆவணங்களை மொபைல் போன்கள், மெயில் அல்லது கணினியில் சேமித்து வைத்துள்ளனர்.
உங்கள் செல்போன், ஈ-மெயில் போன்றவற்றில் வங்கி சார்ந்த விபரங்களை பதித்து வைப்பது ஹேக்கர்களுக்கு பட்டுக் கம்பளம் விரித்து அழைப்பது போன்றது என்பதை இனியாவது தெரிந்து கொள்வோம்.