உங்களை பற்றிய விபரங்கள் திருடப்பட்டுள்ளதா..? கண்டுபிடிக்க டாட்.காம்..!
சமீபத்தில் பல லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட பிரபல ஆன்லைன் நிறுவன டேட்டாக்கள் குறைந்த விலையில் விற்க தயார் என பிரபல ஹாக்கர் இணையத்தில் வெளியானது. இதனால் அதிர்ந்த வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி விவரங்கள், ரகசிய எண்கள் விவரங்கள் அனைத்தும் பொதுவெளியில் சென்றதால் தங்களது பணம் பறிபோகும் என்ற அச்சத்தில் இருந்தனர்.
இதனால் உங்களது விவரங்கள் திருடப்பட்டு, இன்டர்நெட்டில் பரவுகிறதா என்பதை அறிய amibreached.com என்ற தளத்திற்கு சென்று தேடினால் உடனே சொல்லிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.