ஹெல்த் இன்சூரன்சும் முக்கியமே..!
ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள் ஹெல்த் இன்சூரன்ஸினை பொறுத்தவரையில், நான்தான் நன்றாக இருக்கிறேனே? எனக்கு எதற்கு இன்சூரன்ஸ் வேண்டவே வேண்டாம் என்பவர்கள் தான் இங்கு அதிகம்.
கொரோனா பரவி வரும் இந்த நெருக்கடியான நிலையில், உங்களது மருத்துவ செலவு, ஏதேனும் தீவிர நோய் ஏற்படுகின்றது எனில், இருக்கும் சேமிப்புகளை செலவு செய்து விட்டோ அல்லது கடன் வாங்கி செலவு செய்து விட்டு, பிறகு அல்லாடுவார்கள். ஆனால் இன்றைய காலகட்டங்களில் பல நிறுவனங்கள் குறைந்த பிரீமியத்தில், நிறைய ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டங்களை வழங்குகின்றன.
இது தனி நபர் பாலிசி, குடும்ப பாலிசி, குழந்தைகளுக்கான பாலிசி என
தனித்தனியாக உள்ளது. ஆக உங்களின் தேவைக்கு ஏற்ப இவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அன்றாடம் நம் வாழ்வில் அனாவசிய செலவுகளை தவிர்த்து, இது போன்ற அத்தியாவசிய செலவுகளை செய்வது தவறில்லையே. இதுவும் ஒருவகையாக முதலீடு என்று கூட சொல்லலாம்.