அதிக பி.எஃப். கட்டும் பணியாளர்களே..! B அலர்ட்..!
கடந்த பிப்ரவரி 1ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் 2021ல், ஒரு பணியாளரின் வருங்கால வைப்பு நிதியில் ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தால் அதற்கு வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக சம்பளம் பெரும் பணியாளர்களை பாதிக்கும் இச்சட்டம் வருகிற ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. எனவே பணியாளர்கள் தங்களது முதலீட்டு திட்டங்களை மாற்ற முற்படலாம். இதே போல யூலிப் திட்டத்திற்கும் வருடத்திற்கு ரூ.2.5 லட்சம் அதிகமாக செய்யப்படும் முதலீட்டிற்கு, மூலதன ஆதாய வரி உண்டு.