தவணை முறையில் வீட்டுமனை வாங்குபவர்கள்…
தவணை முறையில் வீட்டை வாங்க நினைப்பவர்கள் நியூஸ் பேப்பர் அல்லது மீடியா மூலம் கவர்ச்சிகரமான விளம்பரங்களை மட்டுமே நம்பி வாங்கக் கூடாது. மனை வாங்கும் முன், அதற்கான ஆவணங்களை உங்களுக்கு தெரிந்த வழக்கறிஞரிடம் காண்பித்து சரி பார்க்க வேண்டும்.
விவசாய நிலங்களாக இருந்து மனைகளாக மாற்றியிருந்தால் அதற்கான அனுமதி இருக்கிறதா, மனைகளாக பிரித்து வேஅவுட் போட அனுமதி இருக்கிறதா என்பதையும், நிறுவனத்தின் நம்பகத் தன்மை குறித்தும் தெரிந்து கொண்டு வாங்கு வது முக்கியமானது.