இளவயதிலேயே வீட்டுக்கடனா? கவனிக்க வேண்டிய அம்சங்கள்
சிறு வயதில் அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தவர்கள் செய்யும் முதல் தவறு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதே.
எனவே இவர்கள் தங்களது உயர்சம்பளம் நிரந்தரமானது என எண்ணி அதிக தொகைக்கு மாத இ.ம்.ஐ. கட்டும்விதமாக வீட்டுக்கடன் வாங்குகின்றனர்.
பொதுவாக வேலையில் சேர்ந்து செட்டில் ஆகாத நிலையில் அவசரப்பட்டு வீடு வாங்கக் கூடாது அல்லது கட்டக் கூடாது. வேலையில் நிலைத்தன்மை ஆன பின்னரே அதாவது வேலையில் சேர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆன பின்னரே உங்கள் இல்லக் கனவை நிறைவேற்ற வேண்டும். அதிக சம்பளம் உள்ள வேலை எனும் போது, அந்த வேலையில் ரிஸ்க்கும் இருக்கும்.
எதிர்காலத்தில் ஏற்படும் எதிர்பாரா நிகழ்வுகள் குறித்து கணித்து, அவைகளை களைய இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் யோசித்து செயல்பட்டால், வீட்டுக்கடன் குறித்த பெரிய பிரச்னைகளை சமாளிக்க முடியும். இளம் வயதில் பணத்தை பெருக்கும் முதலீடுகளை ஆரம்பிப்பதே சிறந்த வழி.