காப்புரிமை கேன்சல்… லேஸ் சிப்ஸ் இனி எப்படி..?
பெப்சி நிறுவனம் தயாரித்து வழங்கும் ‘லேஸ்’ சிப்ஸ்களைத் தயாரிக்க எப்எல்-2027 என்ற வகை உருளைக்கிழக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை உருளைக்கிழங்கை பயிரிடுவதற்கான காப்புரிமையை பெப்சி நிறுவனம் வைத்திருந்தது. இந்நிலையில் பெப்சி நிறுவனத்திடம் அனுமதி பெறாமல் இந்த வகை உருளைக்கிழங்கை பயிரிட்ட மூன்று விவசாயிகளிடமிருந்து நஷ்ட ஈடாக ரூ.4.2 கோடி கேட்டு பெப்சி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பெப்சி நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்றது. இந்நிலையில் மெசர்ஸ் குருகாந்தி என்ற நிறுவனம் பெப்சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காப்புரிமையை திரும்பப் பெறுமாறு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து பெப்சி நிறுவனத்திற்கு எப்எல்-2027 ரக உருளைகிழங்கு பயிரிடுவதற்கான காப்புரிமையை ரத்து செய்வதாக HHM மற்றும் எப்ஆர்ஏ அறிவித்துள்ளது. இதனால் எப்எல்-2027 உருளைக்கிழங்கை அதிக அளவில் பயிரிடும் குஜராத் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.