எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் புதுப்பிக்க 3 மாதம் நீட்டிப்பு..!
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, தங்கள் பதிவை 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறிய 48 லட்சம் பதிவுதாரர்கள் பயனடையும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் தங்களது வேலைவாயப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படுகிறது.
இந்த சலுகையை பெற விரும்புபவர்கள், அரசாணை வெளியிடப்படும் நாளில் இருந்து (டிச. 2ம் தேதி) 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். 3 மாதங்களுக்கு பின்பு பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 01.01.2014 தேதிக்கு முன்பு புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.