பழைய தங்கநகை விற்பனையில் லாபம் அறியும் வழி…
பழைய தங்க நகைகளை விற்கும் போது பெறக்கூடிய தொகை சரியானதாக இருக்க என்ன செய்ய வேண்டும்..?
பழைய நகைகளில் பெரும்பாலும் ஹால்முத்திரை இருக்காது. இதனால் நகைக்கடைகாரர்கள் கூறும் தரத்திற்கு ஏற்பவே விலை நிர்ணயிக்கப்படும். அது சரியானதா இல்லையா என்பதும் நமக்குத் தெரியாது.
இதற்கு ஒரே தீர்வு. உங்கள் பழைய நகைகளை உருக்கி விற்பது. உருக்கும் தங்கம் செம்பு நீக்கப்பட்ட, அதாவது கலப்படமற்ற சுத்தத் தங்கமாக மாறும். உருக்கித் தருபவர்களே அதன் தரம் குறித்து உங்களுக்கு ரசீது வழங்கிவிடுவார்கள். இதனடிப்படையில் அன்றைய மார்க்கெட் மதிப்பை கொண்டு உங்களிடம் இருக்கும் தங்கத்திற்கான விலை மதிப்பை சராசரியாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இதன் மூலம் அந்த தங்கத்தை விற்பதால் உங்களுக்கு கிடைக்கும் தொகை சரியானதா என்பது உங்களுக்கு தெரிய வரும். குறிப்பாக கல் நகைகள் என்றால் உருக்கி விற்பது மட்டுமே சரியான, கூடுதல் லாபத்தை தரும். இன்றைய காலத்தில் பெரும்பாலும் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்கத்தையே தருவார்கள். விற்கும் போது சரியான விலை கிடைக்க வாய்ப்பு உண்டு.