ஓய்வுக்கால நிதி திட்டமிடல்
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி) முறையில் ஈக்விட்டி ஃபண்டில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்துவிட்டு ஓய்வுக்காலத்தில் சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (எஸ்.டபிள்யூ.பி) முறையில் பணத்தை எடுத்துக்கொள்வது லாபமாக இருக்குமா என பலருக்கு சந்தேகம் உள்ளது.
நிதித் திட்டமிடல்படி, முதலீடு செய்துவிட்டு, பணி ஓய்வுக்குப் பிறகான செலவுக்குப் பணம் எடுக்கும் திட்டமாக இது இருக்கிறது. ஆனால், இதில் கவனிக்க வேண்டிய அம்சம், வேலை பார்க்கும்போது ஒருவருக்கு வருமானம் வந்து கொண்டிருக்கும்.
குறைவான வயதாக இருக்கும் என்பதால், அவர் ரிஸ்க் எடுத்து ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்து வந்திருப்பார். ஆனால், பணி ஓய்வின்போது சம்பளம் அல்லது வருமானம் வராது. மேலும், சீனியர் சிட்டிசன் என்பதால், முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்க முடியாது. இதனால், அவர் ஈக்விட்டி ஃபண்ட் தொகுப்பு நிதியை அதிக ரிஸ்க் இல்லாத கடன் ஃபண்டுக்கு மாற்றிவிட்டு, அதிலிருந்து சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (ஷிகீறி) முறையில் செலவுக்குப் பணம் எடுப்பதுதான் சரியாக இருக்கும்.