புதிய தொழில்முனைவோருக்கான கேள்வி- -& பதில் பகுதி
கிளஸ்டர் என்றால் என்ன?
குறிப்பிட்ட ஒரே தொழிலை செய்யும் குறைந்தது 20 நபர்கள் இணைந்து உருவாக்கும் அமைப்புகட்கு பெயர் கிளஸ்டர்.
கிளஸ்டர் அமைப்புக்கு கடன் உதவிகள் மற்றும் சலுகைகள் உண்டா?
ஒற்றுமை உணர்வோடு, ஒரே குறிக்கோளோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதற்கு கடனுதவி கிடையாது. மாறாக நீண்ட கால திட்டத்திற்கான நிதியுதவிகள் கிடைக்கும். தொழில் வாய்ப்புகளோடு இணைக்க வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவது தான் கிளஸ்டர் அமைப்பின் நோக்கம்.
இந்த அமைப்பை உருவாக்க கல்வித்தகுதி, அனுபவ அறிவு தேவையா?
ஒரு நிறுவனத்தை திறம்பட நடத்தும் திறனும், அதற்கு தேவையான கல்வித்தகுதியும் கண்டிப்பாக தேவை.
எந்த மாதிரியான தொழிலை இதற்கு தேர்ந்தெடுக்கலாம்?
இதற்கு பதில் உங்களிடம் தான் இருக்கிறது. உற்பத்தி தொழில், சேவைத்தொழில், விற்பனைத்தொழில் இதில் எதுவாகவும் இருக்கலாம்.
இதற்கு விளக்கம் கிடைக்குமா?
உபயோகிப்பாளர்களின் அதிகமான விருப்பத்திற்கேற்ற பொருட்களை உற்பத்தி செய்யலாம். பயனாளர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப சேவைப் பணிகளை மேற்கொள்ளலாம். பல துணைப்பொருட்களை ஒருங்கிணைத்து ஒரு தொழிலாக மாற்றி, தேவைக்கேற்ற வடிவங்களிலும் விற்பனை வாய்ப்புகளை அறிந்து பயன்படுத்தி உபயோகிப்பாளர்களுக்கு விற்பனை செய்யலாம்.
கிளஸ்டர் உருவாக்க முதல்படி என்ன?
கிளஸ்டர் உருவாக்க விரும்பும் தொழில்முனைவோர்கள், ஏதாவது ஒரு தொழில் திட்டத்துடன் திருச்சி அரியமங்கலத்தில் உள்ள டிடிட்சியா அலுவலகத்தை அணுகினால் தக்க ஆலோசனைகள் கிடைக்கும்.
மேலும் சந்தேகங்களுக்கு -தொடர்பு கொள்ளவும் தொழில் ஆலோசகர் இரா.சண்முகம் 9791 949 333