கடன் பிரச்சனை எந்த கடனை முதலில் அடைக்கலாம்?
ஒருவர் வீட்டுக்கடன் வங்கிக்கு திருப்பிச் செலுத்தும் நிலையில் ஏதேனும் சந்தர்ப் பங்களில் மொத்தமாக அதிக பணம் கிடைக்கும்போது அதை வைத்து உடனே வீட்டுக்கடனை அடைப்பதை விட, மற்ற முதலீடுகளை மேற் கொள்வது லாபகரமாக இருக்கும். ஏனென்றால் தற்போதைய நிலவரப்படி வீட்டுக் கடன் வட்டி விகிதம் குறைவான அளவில் சுமாராக 7% ஆக உள்ளது. எனவே மற்ற முதலீடுகளை மேற்கொள்வது லாபகரமாக இருக்கும்.
உதாரணமாக உங்கள் முதலீட்டுக் காலம் எட்டு ஆண்டுகள் என்றால், கையில் இருக்கும் தொகையில் 25 சதவிகிதத்தை மத்திய அரசின் தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யுங்கள். தங்கத்தின் விலை அதிகரிப்புடன் ஆண்டுக்கு 2.5 சதவிகிதம் வட்டியும் கிடைக்கும். மேலும் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், பத்திரத்தின் முதிர்வின்போது வரி எதுவும் இல்லை என்பதால் அது கூடுதல் அனுகூலம்.
மீதமுள்ள தொகையை நன்கு செயல்படும் இரண்டு அல்லது மூன்று ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் சமமாகப் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 12 சதவிகித வருமான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். ஓப்பன் எண்டட் ஃபண்டுகளில் முதலீடு செய்வதால் எப்போது வேண்டுமானாலும் பகுதி, முழுமையாகவோ பணத்தைத் திரும்பபெறும் வசதி உண்டு.”